25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை கொடுத்த முத்தம்; 'என்ன விலை' மேடையில் உருகிய கருணாஸ்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை கொடுத்த முத்தம்; 'என்ன விலை' மேடையில் உருகிய கருணாஸ்!
கருணாஸ்
கருணாஸ்
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கடந்த 2001 ஆம் ஆண்டு பாலா இயக்கிய நந்தா படத்தில் அறிமுகமானவர் கருணாஸ். தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் கமல், தனுஷ் உட்பட பல்வேறு முன்னணி கலைஞர்களின் படத்தில் தோன்றி நடித்தார். அதன் பிறகு சில படங்களை தயாரிக்கவும் செய்தார். அரசியலில் இறங்கி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டப்பேரவை சென்றார். சட்டப்பேரவையில் அதிகம் சிரிக்காத ஜெயலலிதா கருணாஸ் அவர்கள் பாடிய பாடலை கேட்டு தன்னை அறியாமல் சிரித்து மகிழ்ந்தார் என்பது வரலாறு. சில காலம் சினிமாவை விட்டு அரசியலில் இருந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

சஜீவ் பழுர் என்ற பிரபல மலையாள திரைக்கதை எழுத்தாளர் தமிழில் இயக்கும் 'என்ன விலை' என்ற படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கருணாஸ் ஏற்று நடித்திருப்பது நகைச்சுவை கதாபாத்திரம் அல்ல மிக முக்கிய கதாபாத்திரம் என்கிறார்கள் சினிமா வட்டாரம். இப்படத்தில் நிமிஷா முக்கிய கேரக்டரில் நடத்தி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ் பேசிய ஒரு விஷயம் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.

விழாவில் பேசிய கருணாஸ் "என் முதல் படமான நந்தா சூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்தது. அப்போது ராமேஸ்வரம் கோவிலுக்கு அருகே முதல் ஷாட் பாலா சார் எடுத்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே ராமேஸ்வரம் மண்ணில் நான் நடித்துள்ள 'என்ன விலை' படம் சூட்டிங் நடந்திருக்கிறது. சூட்டிங் நடந்தபோது நந்தா படத்தில் முதல் நாள் நடந்த அனுபவம், அதன் பிறகு நான் படிப்படியாக முன்னேறி சினிமா, அரசியல், தயாரிப்பு என்று சென்றதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

கருணாஸ்
கருணாஸ்

மலையாள படங்களைப் பார்க்கும்போது மலையாள படங்களிலோ அல்லது மலையாள டைரக்டர் டைரக்ட் செய்யும் படத்தில் நாம் நடித்து விட மாட்டோமா என்ற ஏக்கம் எப்போதும் எனக்கு இருந்திருக்கிறது. அந்த ஏக்கம் மலையாள இயக்குனர் சஜீவ் மூலமாக இப்போது நிறைவேறி உள்ளது. ராமேஸ்வரம் மண் சென்டிமென்டாக சினிமாவுக்கு ஒரு சக்சஸ் ஃபார்முலா கொண்ட மண். இங்கே ஷூட்டிங் செய்த பல படங்கள் நந்தா உட்பட வெற்றி பெற்றிருக்கிறது. எனவே என்ன விலை படமும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.

இப்படத்தில் என் கேரக்டர் நகைச்சுவை கேரக்டர் அல்ல. கண்டிப்பாக ஒரு குணச்சித்திர கேரக்டர் ஆகும். இந்தியாவில் நடக்கும் ஒரு பிரச்சனையை இப்படம் பேசி உள்ளது. இப்படத்தில் பேசி உள்ள பிரச்சனை இதுவரை எந்த சினிமாவிலும் பேசப்படாத ஒரு விஷயமாகும் என்று பேசிக்கொண்டு வந்தவர் இதன் பிறகு தான் ஒரு ஹைலைட்டான விஷயத்தை சொல்கிறார்.

"ஒரு காட்சியில் மிகவும் தத்துரூபமாக நடிக்க வேண்டி இருந்தது. அது நீதிமன்ற காட்சி. நீதிமன்றத்தில் நிமிஷா வக்கீலாக நடிக்கிறார். ஒரு காட்சியில் நானும் நிஷாவும் பேசிக் கொள்வது போல் இருக்கும். மிகவும் சென்சிட்டிவான அந்த காட்சியை நான் ஒரே டேக்கில் பேசி நடித்து முடித்தேன். அந்த காட்சி முடிந்தவுடன் உடன் நடித்த நிமிஷா என்னிடம் நேரில் வந்து "நன்றாக இருக்கிறது" என்று கை கொடுத்தார். கை கொடுத்ததோடு இல்லாமல் கட்டியும் பிடித்தார். அதன் பிறகு என் நடிப்பை பாராட்டி செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
தனியொரு ஆளாக படம் எடுப்பது சாத்தியமா? சங்ககிரி ராஜ்குமாரின் 'ஒன்' படம் தரும் சினிமா பாடம்!
கருணாஸ்

என் பாராட்டுகளுக்கு என் நடிப்பிற்கு பலவிதமான பாராட்டுகள் எனக்கு கிடைத்துள்ளது. நிமிஷா தந்த இந்த முத்தம் விலைமதிக்க முடியாதது என்று ஓபனாக சொல்லிவிட்டார் கருணாஸ். இது படத்தின் புரமோஷனுக்காக சொல்லவில்லை. உண்மை என்று ஆணித்தனமாக சொல்கிறார் கருணாஸ்.சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் டைரக்டர்.

"நாங்கள் முதலில் கதை சொல்லும்போது தம்பி எனக்கு பெரிய வியாபாரம் எல்லாம் சினிமாவில் கிடையாது. என்னை நம்பி தயாரிப்பதற்கு ஒரு முதல் யோசித்துக் கொள்ளுங்கள்" என்றார் கருணாஸ். நாங்கள் சில நாட்கள் யோசித்து விட்டு கருணாஷை தவிர இந்த கதைக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று எண்ணி மீண்டும் கருணாஸை அணுகினோம் என்கிறார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குனரும்.

இதையும் படியுங்கள்:
ரியோ ராஜின் ராம் அண்ட் லீலா விமர்சனம்: ஏலியன் காதலியும் 6 மணி சஸ்பென்சும் – படம் எப்படி இருக்கு?
கருணாஸ்

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து வெற்றி பெற்ற பாசில், பிரியதர்ஷன் வரிசையில் சுஜியும் வருவாரா? என்பது என்ன விலை படம் வெளியாகும் செப்டம்பர் 17 க்கு பிறகு தெரிந்து விடும். இதன் பிறகு கருணாஸ் சினிமாவில் தொடர்வாரா அல்லது மீண்டும் அரசியல் பக்கம் செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

'நந்தா' படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ராமேஸ்வரத்தில் நடித்துள்ள கருணாஸ், 'என்ன விலை' திரைப்படத்தில் தனக்குக் கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு மற்றும் அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com