உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தமிழிலும் 8வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 7 சீசன் நடந்து முடிந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 8வது சீசன் தொடங்கியது. 7 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார். தற்போது பலர் விஜய் சேதுபதியின் கருத்துக்களை ஆதரித்தாலும், அவர் முகத்தில் அடித்தபடி பேசுகிறார் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
இதுவரை இல்லாததாக 8வது சீசனில் ஆண் பெண் என இரு வீடாக பிரிக்கப்பட்டது. கடந்த சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என பிரிக்கப்பட்டது வரவேற்கபட்டது. தொடர்ந்து இந்த சீசனிலும் வரவேற்கப்பட்ட நிலையில் அனைவரும் சேஃப் கேம் ஆடுவதாக கருத்து பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கோடுகள் அழிக்கப்பட்டு ஒரே வீடாக ஆன நிலையில், அனைவரும் தனித்தனியாக தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். விஜய் சேதுபதியின் நடவடிக்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தற்போது சிவா எலிமினேஷனுக்கு பிறகு மேலும் வலுத்துள்ளது என்றே சொல்லலாம்.
கடந்த வார எவிக்ஷன் ப்ராசசில் கடைசியாக ஆனந்தி, ரஞ்சித் மற்றும் சிவா இருந்தனர். யார் பொம்மை இல்லையோ அவர்கள் எலிமினேட் என சொல்லப்பட்டது. சிவாவின் பொம்மை கிடைக்காததால் அவர் ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார். வைல்ட் கார்ட் ப்ளேயராக வந்த இவர் தற்போது தான் ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், உடனே வெளியேறிவிட்டார்.
ஆனால் வோட்டிங்க் லிஸ்டில் சாச்சனா தான் லீஸ்ட் வோட்டை பெற்றதாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு சாச்சனா ஃபேவரைட் என்பதால் அவரை காப்பாற்றி விட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவாவின் மனைவியான சுஜாதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவாவின் எவிக்ஷன் அன் ஃபேர் என பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆனால் ஒரு சிலர் கடந்த எபிசோட்டில் சாச்சனாவை விஜய் சேதுபதி வறுத்தெடுத்ததால் அப்படி இல்லை என கருத்து பதிவிட்டு வருகின்றனர். சாச்சனா, சாச்சம்மா தேவி கதாபாத்திரத்தின் போது மக்கள் மனதில் கெட்ட பெயர் எடுத்ததையடுத்து சாச்சனா வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர். சாச்சனாவே, கடந்த வாரம் தான் எலிமினேட் ஆவேன் என நினைப்பதாக கூறினார். அந்த அளவிற்கு கடைசி இடத்தை பெற்றிருந்தாலும் அவரை எலிமினேட் செய்யாதது விஜய் சேதுபதிக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த வாரமும் சாச்சனா நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் என்ன நடக்கும் என பார்க்கலாம்.