சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் இதுதான் கதையா?

Siragadikka Aasai
Siragadikka Aasai
Published on

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்க போகிறது என்ற புரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இருந்தது. மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், விஜயா அடமானம் வைக்காமல் விற்று விட்டார். இதனால் வீட்டில் கலேபரமாக மனோஜ் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருக்கு பின் விஜயா இருப்பதையும் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள அண்ணாமலை மனோஜை புரட்டி எடுக்கிறார். அதோடு அண்ணாமலை, விஜயாவிடம் இனி பேச மாட்டேன், தண்ணீர் கூட உன்னிடம் வாங்கி குடிக்க மாட்டேன் என கூறுகிறார். உடனே விஜயா அறைக்கு சென்றவர் தான் வெளியே வரவில்லை.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சின்ன சின்ன அழகான விஷயங்கள் நடந்துள்ளது. பாட்டி மகன், பேரன்களுடன் சாப்பிடும்போது தனது காதல் கதையை கூறுகிறார். பின் மனோஜ் நகைக்கு செல்ல கைக்கு கிடைத்த கடிதத்தை கண்டு பயப்படுகிறார், ஆனால் ரோஹினி இதெல்லாம் யாரோ உண்மையை ஏமாற்ற செய்வது என கூறி ஆறுதல் செய்கிறார். இன்னொரு பக்கம் முத்து-மீனா 2வது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி, அண்ணாமலை என எல்லோரும் சந்தோஷப்பட விஜயா வழக்கம் போல் பேசுகிறார். இதனால் அவர் பாட்டியிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

இதையும் படியுங்கள்:
சாவர்க்கர் குறித்த சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா... என்ன நடந்தது?
Siragadikka Aasai

இன்றைய எபிசோட் முடிவில் அடுத்த வாரம் என்ன கதைக்களம் என்ற சின்ன ஹின்ட் வெளியிட்டுள்ளனர். அதில் மனோஜ் அந்த கடிதத்தை வைத்துக்கொண்டு நிற்க அதைப்பார்த்த விஜயா என்ன என கேட்கிறார், மனோஜும் இந்த விஷயத்தை கூறுகிறார். அத்தை பணம் கொடுக்க சொன்னதால் அதில் இருந்து தப்பிக்க இப்படியொரு விஷயத்தை கிளப்பிவிடுறியா என விஜயா கேட்கிறார். இந்த கடை பிரச்சனை வைத்தே அடுத்த வார கதைக்களம் நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com