Biggboss 8: அந்த 6 பேரின் முடிவுதான் இங்கு எல்லாம் - வெளியேறும்போது தர்ஷா குப்தா சொன்னது இதுதான்!

BIggboss 8
BIggboss 8
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பிக்பாஸ் சீசன் 8ல் நேற்று தர்ஷா குப்தா எவிக்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்றைய ப்ரோமோவில், போட்டியாளர்களின் நாமினேஷன் நடைபெறுகிறது.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர்சந்திரசேகர், கானாஜெப்ரி, விஜேவிஷால், நா. முத்துக்குமரன், சத்யா , அருண்பிரசாத், சௌந்தர்யாநஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜேஆனந்தி, பவித்ராஜனனி, தர்ஷாகுப்தாஎன 18 பேர் கலந்துக்கொண்டனர்.

போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து முதல் வாரம் ரவீந்திரன் எவிக்ட் செய்யப்பட்டார். போகும்போது ஒவ்வொருவரையும் பற்றி விமர்சனம் சொல்லி தெறிக்கவிட்டுப் போய்விட்டார்.

இதனையடுத்து அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு சென்ற வாரம் இறுதியில் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் நடத்தப்பட்டது.  இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் அணி நாமினேஷன் பிரீ பாசை அசால்டாக தட்டிச் சென்றனர். இந்த பாஸ் வைத்து யாரைக் காப்பாற்றுவது என்று அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்தனர். இறுதியில் அனைவரும் பவித்ராவை தேர்ந்தெடுத்தனர். இதனால், சௌந்தர்யா ஜெஃப்ரியிடம் இதை சொல்லி அழுதார். 

இதனையடுத்து சனி மற்றும் ஞாயிறு விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்தார். அவர் வழக்கம்போல் போட்டியாளர்களை கேள்விகள் எழுப்பி திக்கு முக்காட செய்துவிட்டார். இதனையடுத்து நேற்று தர்ஷா குப்தா எவிக்ட் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்ததும் போட்டியாளர்கள் குறித்து பேசுகையில், தர்ஷா குப்தா கூட உள்ளிருக்கும் ஆறு பெண் போட்டியாளர்கள் தான் குரூப்பாக விளையாடுகிறார்கள். இவங்க ஆறு பேர் கூட்டணி எடுக்கும் முடிவு தான் இந்த வீட்டிற்குள் அமல்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
News 5 - (28.10.2024) 'அமரன்' திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்!
BIggboss 8

மீதமுள்ளவர்களை எல்லாம் டார்கெட் செய்கிறார்கள் என்றும் இவர்களில் இரண்டு பேர் வெளியே வரவேண்டும் அதற்கான வேலைகளை நான் செய்வேன் என்றும் சொல்லியிருந்தார். மொத்தம் உள்ளே 9 பெண் போட்டியாளர்கள் இருந்த நிலையில் தர்ஷா குப்தா, சௌந்தர்யா, சாச்சனா என மூன்று பேரும் மட்டும் தனியாக பிரிக்கப்படுவதாக தர்ஷா நேற்று மேடையில் சிரித்தபடியே போட்டு தாக்கி இருந்தார்.

இந்தநிலையில்தான் இன்று நாமினேஷன் நடக்கிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பெயரை சொல்கிறார்கள். இதனையடுத்து யாரெல்லாம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் என்பதை எபிசோட்டில்தான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com