Biggboss 8: யார் கெத்து டாஸ்கில் கோட்டைவிட்ட ஆண்கள் அணி!

BB 8
BB 8
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில், இரு அணிகளுக்கும் இடையே யார் கெத்து டாஸ்க் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் அணி ஒரு பாய்ண்ட்டில் தோல்வியடைகிறது.

பிக்பாஸில் கடந்த 7 சீசன் கமலஹாசனால் தொகுக்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. இதனையடுத்து விஜய் சேதுபதி தொகுக்கும் இந்த சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால், சென்ற வாரம் அவரின் கேள்விகள் மற்றும் கவுண்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நா. முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டனர்.

போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து இந்த வாரம் ரவீந்திரன் எவிக்ட் செய்யப்பட்டார். போகும்போது ஒவ்வொருவரையும் பற்றி விமர்சனம் சொல்லி தெறிக்கவிட்டுப் போய்விட்டார்.

இன்றைய ப்ரோமோவில் யார் கெத்து என்ற டாஸ்க் நடத்தப்படுகிறது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு அணியிலும் 3 பேர் கலந்துக்கொள்ளலாம். ஒரு லிஸ்டில் மொத்தம் 15 பொருட்கள் உள்ளன. அதை அப்படியே மனப்பாடம் செய்துவிட்டு அந்தப் பொருட்களை எடுத்து அதே வரிசையில் அடுக்கி வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!
BB 8

இந்த டாஸ்க்கில் ஆண்கள் அணி 24 பாயிண்ட் எடுக்கிறார்கள். பெண்கள் அணியினர் ஒரு பாய்ண்ட் கூடுதலாக 25 பாய்ண்ட் எடுக்கிறார்கள். இதனால் பெண்கள் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து பெண்கள் அணியில் நாமினேட் ஆனவர்களை நாமினேஷன் லிஸ்ட்டிலிருந்து எடுத்துவிடலாம் என்று பிக்பாஸ் கூறுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்தது.

பெண்கள் அணி மிகவும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கின்றனர். ஆண்கள் அணி சோகமாக சோபாவில் உட்கார்ந்திருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com