நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

murali with Atharva
murali with Atharva
Published on

90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. அவர் சினிமாவுக்கு வந்தது குறித்தும், அவர் அம்மாவின் இறப்பு குறித்தும் ஒரு பேட்டியில் பேசியிருந்ததைப் பார்ப்போம்.

80, 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் சகோதரர், ஹீரோ, காதல் மன்னன் என அனைத்துக் கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பிய மறைந்த மூத்த நடிகர் முரளி. இவர் தனது எதார்த்தமான நடிப்பின்மூலம் மக்களைக் கவர்ந்தவர். இவர் தனது மூத்த மகன் அதர்வாவின் முதல் படமான பானா காத்தாடியில் கேமியோ ரோல் செய்தார். இதுதான் அவரின் கடைசி படமும் கூட. அதன்பின்னர் சிறிதுகாலங்களில் மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

அந்தவகையில் அவர் தனது அம்மாப்பற்றி நினைவுக்கூர்ந்ததைப் பார்ப்போம். “அப்பாக்கு என்ன வைத்து படம் எடுக்கனும் தோனல. அம்மாதான் Force பண்ணாங்க. எத்தனையோ பேருக்கு படம் பண்ணிருக்கீங்க. உங்க பையன வச்சு படம் எடுங்கன்னு சொன்னாங்க. அந்தப் படம் 25 லட்சத்துக்கு எடுத்தது. ஆனா அப்பவே 1 கோடிக்கு வசூல் செய்தது. அப்போ ஹீரோயினுக்குலாம் சேர் போட்டாங்க. என்ன கண்டுக்கவே இல்ல. ஒரு காபி கேட்டா இருங்க இருங்க வரும்னு சொல்லுவாங்க.

எங்க வீட்ல நான் அம்மானு சொன்னா உடனே எல்லாம் வரும். ஆனா படம் எடுக்குறப்போ ஹீரோயினுக்கு ஒரு விஷயம் நடக்கும், எனக்கு ஒரு விஷயம் நடக்கும். அவுங்களுக்கு ஏசி ரூம், எனக்கு நார்மல் ரூம், அவுங்களுக்கு கேரவன், எனக்கு ஒரு வேன் கொடுப்பாங்க. என்ன கதாநாயகனாவே நினைக்கல.” என்று இதுதொடர்பாக பேசும்போது தொகுப்பாளர் அம்மாவிற்கு என்ன வயது ஆகிறது என்று கேட்டார். அப்போது முரளி பேசியதாவது, “அம்மா.. அம்மா இப்போ இல்ல…

இதையும் படியுங்கள்:
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவை பழி வாங்க ரோகிணி போட்ட திட்டம் தோல்வி…!
murali with Atharva

அவுங்க 1999 ல… எங்க அக்கா கீழ பட்டாசு வெடிச்சுட்டு இருந்தாங்க, அப்போ அம்மா பால்கனியில நின்னு பாத்துட்டு இருந்தாங்க. அப்போ சைட்லலாம் விளக்கு ஏற்றி வச்சுருக்கும்போது, சேல விளக்குல பட்டுருச்சு, அப்போ அவுங்க நெருப்பப் பாத்து பயந்துட்டு பின்னாடி போகாம, முன்னாடி போய் விழுந்துட்டாங்க. மாடிலேந்து கீழ விழுந்து head open ஆகி இறந்துட்டாங்க. It was an accident தான். தீபாவளி அன்னைக்கே இறந்துட்டாங்க. அவுங்கதான் எனக்கு கல்யாணம் பன்னிவச்சாங்க…” என்று மனமுருகி பேசியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com