
உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தமிழிலும் 8வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 7 சீசன் நடந்து முடிந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 8வது சீசன் தொடங்கியது. 7 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார். தற்போது பலர் விஜய் சேதுபதியின் கருத்துக்களை ஆதரித்தாலும், அவர் முகத்தில் அடித்தபடி பேசுகிறார் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
இதுவரை இல்லாததாக 8வது சீசனில் ஆண் பெண் என இரு வீடாக பிரிக்கப்பட்டது. கடந்த சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என பிரிக்கப்பட்டது வரவேற்கபட்டது. தொடர்ந்து இந்த சீசனிலும் வரவேற்கப்பட்ட நிலையில் அனைவரும் சேஃப் கேம் ஆடுவதாக கருத்து பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கோடுகள் அழிக்கப்பட்டு ஒரே வீடாக ஆன நிலையில், அனைவரும் தனித்தனியாக தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.
இந்த வார டாஸ்க்காக டெவில், ஏஞ்சல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது. டெவில்ஸ் அனைவரும் ஏஞ்சல்ஸ்களிடம் இருந்து இதயத்தை பிடுங்குவதற்காக அவர்களை டார்ச்சர் செய்து வருகின்றனர். அப்படி சாச்சனா டெவில் ஆனந்தி ஏஞ்சலை முட்டையை குடிக்க வைத்து டார்ச்சர் செய்கிறார். அது தெரியாமல் கீழே விழ, சாச்சனா அந்த முட்டையை எடுத்து ஆனந்தி வாயில் வைக்க முற்படுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அன்சிதா, என்ன இது என கூறி கதறி அழுகிறார். மேலும் என்னை வெளியே அனுப்புங்கள் என கதறி அழுகிறார். இதுவரை அமைதியாக இருந்த ஜெஃப்ரியையே கதறி அழுக வைத்துள்ளனர் டெவில்ஸ். இதனால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
மேலும் மஞ்சரி பலரையும் டார்ச்சர் செய்து வருகிறார். ஆனந்தியிடம் சாப்பாடு தட்டை பிடுங்கி தொந்தரவு செய்ய, மீண்டும் கடுப்பான அன்சிதா மஞ்சரியிடம் சண்டையிட்டு மீண்டும் தட்டை பிடுங்கி ஆனந்தியிடம் கொடுத்தார். இந்த சண்டை உச்சக்கட்டமாக வெடிக்கவே, முத்துக்குமார் மஞ்சரியை தப்பு என கூறுகிறார். ஆனால் கேட்காத மஞ்சரி பிரச்சனையை தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே அருணுடன் அவர் செய்த பிரச்சனையே வெடித்து வரும் நிலையில், மேலும் மேலும் சண்டையிட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
இந்த வாரமாவது விஜய்சேதுபதி சாச்சனாவை கிழித்தெடுப்பாரா என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முந்தைய பிக்பாஸ் சீசன் 2வதில் சர்வாதிகாரி டாஸ்கில் இதே போன்று ஐஸ்வர்யா தட், பாலாஜி மீது குப்பையை கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இதே போன்று தற்போது சாச்சனா செய்த செயல் பலரையும் கடுப்படைய செய்துள்ளது.