Bloody Beggar ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bloody beggar
Bloody beggar
Published on

கவின் நடிப்பில் வெளியான ப்ளெடி பெக்கர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகராக அறிமுகமான கவின், பின்னர் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். முதலில் இவருடைய இரண்டு மூன்று படங்கள் வந்ததும், போனதும் தெரியாமல் இருந்தன. அப்போது டாடா படமே இவரை பெரிய அளவில் தூக்கிவிட்டது. சாதாரண ரசிகர்கள் முதல், சினிமா ரசிகர்கள் வரை அனைவரையும் இப்படம் கவர்ந்தது.

பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் கூட தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பின்னர் இவரின் படங்களுக்கும் எதிர்பார்ப்புகள் கூடின. அந்தவகையில் ஸ்டார் படம் விமர்சன ரீதியாக சற்று அடிவாங்கியது. ஆகையால், தொடக்கத்தில் இருந்த வசூல், போகப்போக குறைந்தது.

மேலும் நயன்தாராவுடன் கிஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின்.

ப்ளெடி பெக்கர் படத்தை நெல்சன் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி அன்று ரிலீஸானது. ப்ளெடி பெக்கர், அமரன், ப்ரதர், லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் தீபாவளி அன்று ரிலீஸாகின. அமரன் படமும் லக்கி பாஸ்கர் படமும் நல்ல வசூலை பெற்று இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றன. இதனால், அமரன் படத்தின் ஓடிடி வெளியீடை தள்ளி வைக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், ப்ரதர் படமும் ப்ளெடி பெக்கர் படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனால், தயாரிப்பாளர் நெல்சன் நஷ்ட ஈடு வழங்கும் நிலை வந்தது. ப்ளெடி பெக்கர் திரைப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 

திரையரங்குகளில் இப்போது ப்ளெடி பெக்கர் படம் திரையிடப்படவில்லை என்பதால், விரைவில் ஓடிடி தளத்திலாவது வெளியிட படக்குழு திட்டமிட்டனர். அதன்படி இத்திரைப்படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள்:
குமாஸ்தன்: தவற விடக்கூடாத படமல்ல; பொழுது போகவில்லை என்றால் பார்த்து வைக்கலாம்!
Bloody beggar

முதல்நாள் விமர்சனம் பார்த்து பலர் ப்ளெடி பெக்கர் படத்திற்கு செல்லவில்லை. ஓடிடியில் வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று ரசிகர்கள் விட்டுவிட்டனர். ஓடிடி ரிலீஸுக்கு பின்னர் அனைவரும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் ஹானஸ்ட் ரிவ்யூ கொடுப்பார்கள். இதன்மூலம் மட்டுமே ப்ளெடி பெக்கர் படம் உண்மையாக எப்படி இருக்கிறது என்பது குறித்தான இறுதி முடிவு தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com