வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து இனி இவரும் குக்வித் கோமாளியில் இல்லை... ரசிகர்கள் வேதனை!

venkatesh bhat - dhamu
venkatesh bhat - dhamu

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

குக்வித் கோமாளியில் இருந்து விலகுவதாக அடுத்த நடுவர் செஃப் தாமுவும் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பட்டிதொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதுவரை 4 சீசன்கள் கடந்த நிலையில் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் பங்கேற்ற குக்குகளை விட கோமாளிகளே அதிக வாய்ப்பை பெற்று தற்போது சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க அதற்கு இந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியே காரணமாகும்.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றவர்கள் தான் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட். இருவரும் குக்கோடும், கோமாளிகளோடும் சரிசமமாக இறங்கி ஃபன் செய்வது மக்களை ரசிக்க செய்தது. அதிலும் குறிப்பாக செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு என்று சொல்லலாம். அவர் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலே பலரும் மெசேஜ் அனுப்புவதாகவும், அடுத்த வாரம் இதனால் தான் வரவில்லை என அவர் நிகழ்ச்சியிலேயே மன்னிப்பு கேட்பார். அப்படி ரசிகர்களின் ஃபேவரைட் ஆன இவர், அடுத்த சீசனில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து தற்போது செப் தாமுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டேன் என ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், தானும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து புதிதாக ஒரு ஷோவை தொடங்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் இருவரையும் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு பக்கம் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்க்க முடியாவிட்டாலும் வேறொருநிகழ்ச்சியில் வரவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளதால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com