‘சின்ன மருமகள்’ சீரியல் நடிகருக்கு கிடைத்த சர்வதேச விருது...!

சின்ன மருமகள் தொடரில் நடித்ததற்காக நடிகர் நவீன்குமாருக்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
chinna marumagal serial actor naveen kumar get International Icon Awards
chinna marumagal serial, naveen kumarImage credit- JioHotstar, Never miss a post from navinactor_official
Published on

சின்னத்திரை உலகில் பல இளம் மற்றும் சீனியர் நடிகர்களுக்கு மத்தியில், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகர் நவீன் குமார். தற்போது சின்ன மருமகள் தொடரில் நடித்ததற்காக நடிகர் நவீன்குமாருக்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ சீரியல், குடும்பக் கதையம்சம் கொண்ட, உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கொண்ட தொடராக மக்களிடையே பிரபலமாக உள்ளது.

கிராமத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, குடும்ப சூழல் காரணமாக பழமைவாத பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு சென்ற பிறகு அந்த குடும்பத்தில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளையும், சவால்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மையமாக வைத்து சின்ன மருமகள் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் நடிகர் நவீன் குமார், ‘சேதுபதி’ (சேது) என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வேதா நடித்து வருகிறார். இவர்களுடன் வி.ஆர். திலகம், பானுமதி, சங்கவி ராஜேந்திரன், ஸ்வேதா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடருக்கு பக்க பலமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
விஜய் டிவி விருதுகள்: 4 விருதுகளை தட்டித்தூக்கி ஆச்சரியப்படவைத்த ‘சீரியல்’!
chinna marumagal serial actor naveen kumar get International Icon Awards

இந்தக் கதையில் கதாநாயகனாக வரும் நவீன் குமார் மற்றும் நடிகை ஸ்வேதா ஜோடியின் இயல்பான, எதார்த்தமான நடிப்பால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் ஃபேவரைட் ஜோடியாகவும், பலரால் பாராட்டப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் தான் இந்த தொடரின் நாயகன் நவீன்குமாருக்கு சர்வதேச அளவில் ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த பிரபல ஊடக நிறுவனம் 'தேசம்' என்ற தொலைக்காட்சி நிறுவனம், சின்னத்திரை துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 'சின்ன மருமகள்' சீரியலில் சிறப்பான நடிப்புக்காக, நவீன் குமாருக்கு ‘சின்னத்திரையின் மக்கள் நாயகன்’ என்ற சர்வதேச விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ் டிவி தொடரில் நடித்ததற்காக மலேசியாவில், இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் சின்னத்திரை நடிகர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார் என்பதாகும்.

சின்னத்திரை நடிகர்களுக்கு சர்வதேச அளவில் இப்படியான அங்கீகாரம் கிடைப்பது அரிதிலும் அரிதான விஷயமாகும். அந்த வகையில், இந்த விருது அவரது நடிப்புப் பயணத்தில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

நவீன் குமாருக்கு சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சரிவில் விஜய் டிவி சீரியல்கள்... வந்தாச்சு TRP ரேட்டிங்... முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?
chinna marumagal serial actor naveen kumar get International Icon Awards

இதற்கு முன் நவீன் குமார், கலர்ஸ் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘இதயத்தை திருடாதே’ என்ற சீரியலில் நடித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com