பிக் பாஸ் சீசன் 8ல் இணைகிறாரா காமெடி நடிகர் செந்தில்!

Senthil in Biggboss 8
Biggboss 8
Published on

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடர்பான செய்திகள் கசிந்து வருகின்றன. அந்தவகையில் பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விஜய் டிவியில் ஒவ்வொருமுறையும் மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் தொடர். மொத்தம் இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 7 சீசனையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். வாரம் ஐந்து நாட்களைவிட கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்.

கடந்த சீசனில் கமலஹாசன் ஒரு பக்கமே பேசுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் சிலர் கமலை ட்ரோல் போட்டுத் தாக்கினர். மறுபக்கம் கமல் படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஆகையால், அப்போதே அவர் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தவகையில் இந்த சீசனிலிருந்து அவர் விலகியது உறுதியானது.

அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்போது பிக்பாஸ் சீசன் 8ன் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் விஜய் டிவி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இதற்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட 7 சீசன்களில் பெரியளவு பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை போட்டியாளர்களை மீண்டும் களமிறக்க திட்டமிட்டுள்ளனராம்.

இதையும் படியுங்கள்:
கணவரை பறிகொடுத்த பின், ஆடவரோடு ஜோடி சேர்ந்து நடிக்காத வெண்கல குரல் திரைநாயகி!
Senthil in Biggboss 8

இதனையடுத்து நடிகர் ரஞ்சித், நடிகர் ரியாஸ்கான், நண்டு ஜெகன், குக் வித் கோமாளி சுனிதா, சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டவர்களும் இந்த சீசனில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சிதாவும் இணையவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இதனையடுத்து தற்போது மற்றொரு செய்தியும் இணையத்தில் கசிந்துள்ளன. அதாவது வெகுகாலமாக சினிமா துறையிலிருந்து விலகியிருந்த பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் பிக் பாஸ் தொடரில் இணையவுள்ளாராம். இவர் முன்னதாக விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்று கரகாட்டக்காரன் படத்தின் அனுபவங்களை பகிர்ந்த நிலையில் தற்போது மீண்டும் டிவி பக்கம் வந்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com