'குக் வித் கோமாளி' போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

Cook with comali season 5
Cook with comali season 5Img Credit: Disney+ Hotstar

குக்வித் கோமாளி சீசன் 5வது போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

உலக புகழ்பெற்ற ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. குக்கிங் ஷோவை அழகாக எடுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு அதிக ரசிகர்கள் உண்டு.

இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிறைய கோமாளிகளுக்கு பல வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், போட்டியாளர்களை விட... அவர்களுக்கு உதவி செய்ய கொடுக்கப்படும் கோமாளிகள் தான். பழைய கோமாளிகளான புகழ், குரோஷி, சுனிதா இருக்க புதுசாக ஏற்கனவே விஜய் டிவியில் கலக்கபோவது யார் நிகழ்ச்சியில் கலக்கிய விஜய் டிவி ராமர், வினோத் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிக உற்சாகமடைந்துள்ளனர்.

முதல் வாரம், குக்கள் முதல் கோமாளிகள் வரை அனைவருமே சற்று சொதப்பிய நிலையில் இந்த வாரம், காமெடிக்காக அதிகமாக பேக் வாய்ஸ் போட்டே ஒப்பேத்தியது போல் இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி வரும், போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
நேருக்கு நேராக மோதுகிறதா ராயன் - தங்கலான்! எப்போது தெரியுமா?
Cook with comali season 5

அதன் படி, TTF வாசனின் காதலியாக அறியப்படும் ஷாலின் சோயா ஒரு எபிசோடுக்கு ரூ.10,000 வாங்குவதாக கூறப்படுகிறது. அதே போல் ஜீ தமிழ் சீரியல் நடிகர் அக்ஷய் கமலும் ஒரு எபிசோடுக்கு ரூ.10,000 வீதம் பெறுகிறார். இவரை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர் வசந்த் வஷி ஆகியோரும் ரூ.10,000 ஒரு எபிசோடுக்கு பெறுகிறார்கள்.

இவர்களை தொடர்ந்து, செய்திவாசிப்பாளராக இருந்து சமீபத்தில் கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ள திவ்யா துரைசாமி ஒரு நாளைக்கு ரூ.12,000 சம்பளமாக பெறுகிறார், அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமாகி தற்போது சமையலில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் பூஜா வெங்கட் ஒரு எபிசோடுக்கு ரூ.9,000 பெறுகிறார். இவர் தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் குறைவான சம்பளம் வாங்கும் பிரபலம்.

பிரபல யூ டியூபர் இர்ஃபான் மற்றும் காமெடி நடிகர் விடிவி கணேஷ் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ.15,000 வீதம் பெறுகிறார்கள். இவர்களை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களான நடிகை சுஜிதா மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ.18,000 வாங்குகின்றனர். இவர்கள் தான் இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்களாக அறியப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com