நேருக்கு நேராக மோதுகிறதா ராயன் - தங்கலான்! எப்போது தெரியுமா?

Raayan vs Thangalaan
Raayan vs Thangalaan

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் மற்றும் விக்ரமின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 படங்களும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவற்றின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.

தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன்-ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் கதாபாத்திர அறிமுகங்களை வெளியிட்டனர். இந்த படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் காரணமாக தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மாமன்னன், புஷ்பா படம் குறித்து மனம் திறந்த பகத் பாசில்... என்ன சொன்னார் தெரியுமா?
Raayan vs Thangalaan

இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நாளில்தான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த நாளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 2 படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதால் வசூலை குவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் தங்கலான் ரிலீஸ் தேதியும் விரைவில் அபிஸியலாக அறிவிக்கப்படவுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com