குக் வித் கோமாளி – புதிய சீசன், புதிய போட்டியாளர்கள்!
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. கடந்த சீசன் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது. கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. கடந்த சீசனில் ஏராளமான வித்தியாசமான சுற்றுகள் வைக்கப்பட்டன. குடும்பச்சுற்று, வெளிநாட்டவர்கள் சுற்று, பாட்டிகள் மற்றும் குட்டீஸ்கள் ரவுண்ட் என மிகவும் கலகலப்பாகச் சென்றது. அதேபோல், சில படக்குழுக்களும் வந்து நிகழ்ச்சியை கோலாகலப்படுத்தினர்.
இதற்கிடையே மணிமேகலை பிரியங்கா ஆகியோருக்கு இடையில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. மணிமேகலை, பிரியங்கா தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார், டாமினேட் செய்கிறார் என்று குற்றம்சாட்டினார். ஆனால், பிரியங்கா இதுகுறித்து எதுவும் பேசவில்லை. பிரியங்காவிற்கு ஆதரவாக பலர் பேசினர். குறிப்பாக குக் வித் கோமாளி செட்டில் உள்ளவர்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால், மணிமேகலை இனி இந்த ஷோவில் தொடரமாட்டார் என்பது உறுதியானது.
இப்படியான நிலையில், குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் வரும் 4ம் தேதி தொடங்கவுள்ளது. அதேபோல் மேட் செஃப் என்றழைக்கப்படும் கௌஷிக் இந்த சீசனில் நடுவராக இணையவுள்ளாராம். இவர் இதற்கு முன்னர் சன் டிவியின் Master chef –ல் நடுவராக இருந்தார். இவர்தான் குக் வித் கோமாளியின் மூன்றாவது நடுவராம். மொத்தம் மூன்று நடுவர்கள் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்த சீசனின் போட்டியாளர்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யவம்சம் படத்தில் நடித்த பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், செம்பருத்தி நாடகத்தில் நடித்த ஷபானா, அமரன் படத்தில் நடித்த உமர் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
அதேபோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, எதிர்நீச்சல் மதுமிதா, சிறகடிக்க ஆசை கோமதி பிரியா, நடிகை வடிவுக்கரசி, பிக்பாஸ் தீபக் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வந்தன.