இரண்டு பிரம்மாண்டங்கள் மோதுகின்றன!

 Chef Venkatesh Bhat vs Chef Damu
Chef Venkatesh Bhat vs Chef Damu

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது குக் வித் கோமாளி தான். கடந்த 4 சீசன்களிலும் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக பங்கேற்று இந்நிகழ்ச்சியை வழிநடத்திச் சென்றனர். இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து வெங்கடேஷ் பட் வெளியேறினார். அவருக்கு பதிலாக புகழ்பெற்ற சமையல் வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜன் புதிய நடுவராக பங்கேற்றுள்ளார். கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கியது குக் வித் கோமாளி சீசன் 5ல்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். இவரது புதிய 'டாப் குக்கு டூப் குக்கு' சமையல் நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தார் வெங்கடேஷ் பட். என்னோடு சேர்ந்து செஃப் தாமுவும் வெளியேறுவார் எனக் குறிப்பிட்ட இவர், அந்த வீடியோவை சில மணித்துளிகளில் நீக்கி விட்டார். இந்நிலையில், குக் வித் சீசன் 5 தொடங்கிய பின் வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியில் இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்து விட்டது.

கடந்த 25 வருடங்களாக விஜய் டிவியின் முக்கிய அங்கமாக இருந்த மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் தற்போது வெளியேறி விட்டது. இத்தகவலை அந்நிறுவனத்தின் முக்கிய நபரான ரைவ்ஃபா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வெங்கடேஷ் பட்டும், மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து சன் டிவியில் 'டாப் குக்கு டூப் குக்கு' என ஒரு புதிய சமையல் நிகழ்ச்சியைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படியுங்கள்:
வாடிவாசல் குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்… பாராட்டிய மிஷ்கின்!
 Chef Venkatesh Bhat vs Chef Damu

வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, ரசிகர்களான உங்களுக்கு காலை 8 மணியில் இருந்து ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இது, ரசிகர்கள் இடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாக வெங்கடேஷ் பட்டின் தலைமையில் 'டாப் குக்கு டூப் குக்கு' சமையல் நிகழ்ச்சி தொடங்கவிருப்பது ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சின்னத்திரை தொடர்களை சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய இரண்டு பெரிய தொலைக்காட்சிகள் போட்டி போட்டு நடத்தி வருகின்றன. சின்னத்திரை தொடர்களில் டிஆர்பி-யில் முதலிடம் பிடிக்கும் சன் டிவி, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தடுமாறுகிறது. இந்நிலையில், வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி வெளிவந்த பின்னர், சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சமையல் கலை பிரம்மாண்டங்கள் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் தனித்தனியே நடுவர்களாக பங்கேற்கும் சமையல் நிகழ்ச்சிகளில், இரு தமிழ்ச் சேனல் பிரம்மாண்டங்கள் மோதுகின்றன. இந்த மோதல் சமையல் நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. 

சரியான போட்டி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com