வாடிவாசல் குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்… பாராட்டிய மிஷ்கின்!

Vadivasal
Vadivasal

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தைப் பற்றி ஒரு விழாவில் வெற்றிமாறன் வாய்த்திறந்திருக்கிறார். அதேபோல், படத்தைப் பற்றியும், சூர்யாவைப் பற்றியும் மிஷ்கின் பாராட்டி பேசியிருக்கிறார். இதனால், வாடிவாசல் என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழ் சினிமாவில் தரமான படங்களைக் கொடுத்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் வெற்றிமாறன். அவருடைய ஒவ்வொரு படத்தின் முதல் அப்டேட் வெளியாகும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியானது. சூரி ஹீரோவாக நடித்த இப்படத்தில், விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, வெற்றிமாறனின் அடுத்தப் படமான வாடிவாசல் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏனெனில், தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக வாடிவாசல் உள்ளது.

இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார். வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு கடந்த 2020-ம் ஆண்டே வெளிவந்தது. அப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைப்பாளராக கம்மிட்டாகி இருப்பதாகவும் அறிவித்தனர். சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும்படி படமாக்கப்பட்ட காட்சிகளின் போட்டோக்கள் இணையத்தில் வெளிவந்தன.

ஆனால் அதன்பின்னர் வாடிவாசல் படம் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருகட்டத்தில் சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கம்மிட்டானதால், வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? என்ற கேள்விகளும் ரசிகர்களிடம் எழுந்தன. ஆனால் படக்குழு அதை திட்டவட்டமாக மறுத்தது.

இதையும் படியுங்கள்:
திருமண கவுனை வேறு மாடலில் மாற்றிய சமந்தா… வைரலாகும் க்ளிக்ஸ்!
Vadivasal

இந்நிலையில், வாடிவாசல் பற்றிய அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி விருது விழா ஒன்றில் வெற்றிமாறன் பேசியிருக்கிறார். விடுதலை 2 முடிந்ததும் அடுத்து முழுக்க முழுக்க வாடிவாசல் அப்டேட் தான் வரும் எனக் கூறி இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மீண்டும் ஆக்டிவ்வாக ஆரம்பித்துவிட்டார்கள்.

அதேபோல், இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின், “இந்தியாவில் படைக்கப்போகும் மிகச்சிறந்த படைப்பு, இந்தப்படம். ஏனெனில், வாடிவாசல் அவ்வளவு பெரிய ஹிட்டாகும். சூர்யா ஒரு Extraordinary actor. He is going to be a legend.” என்று பாராட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com