விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜுக்கு செய்வினை வைத்தது யார் என்பது தெரியாத நிலையில், ஒரு வீடியோவால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய எபிசோடில் விஜயாவும் மனோஜும் ஜோசியர் சொன்னதுபடி, கோவிலில் தீச்சட்டி ஏந்தி பரிகாரம் செய்கின்றனர். அதை மீனாவும் முத்துவும் பார்த்துவிட்டு ஷாக் ஆகின்றனர். மேலும் வீடியோ எடுத்து வைக்கின்றனர்.
ரவியும் ஸ்ருதியும் வீட்டில் இருக்கின்றனர். ரவி ஏன் பா வேலைக்கு போறீங்க என அண்ணாமலையிடம் கேட்கிறார். பாத்துக்கலாம் விடுடா என அண்ணாமலை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்கு வரும் முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் அந்த வீடியோவை காட்டுகின்றனர்.
இதனைப் பார்த்து ரவியும் ஸ்ருதியும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இவர்கள் சிரிப்பதைப் பார்த்து ரோகிணி, மனோஜ், விஜயா ஆகியோர் மிகவும் கடுப்பாகின்றனர்.
அண்ணாமலை ஏன் இந்த பரிகாரமெல்லாம் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், ”எனக்கு யாரோ செய்வினை வெச்சிருக்காங்க. அதுக்கு பரிகாரமாதான் இப்படி செஞ்சோம்” என கூறுகிறார்.
இதற்கு அண்ணாமலை, “ஒருத்தர அழிக்க மூணு முட்ட போதும்னா… உலகத்துல யாருமே நல்ல இருக்க மாட்டாங்க…” என்கிறார். அதற்கு மீனாவும் கரெக்ட் என்று ஒப்புக்கொள்கிறார்.
பின் இதெல்லாம் எப்படி நம்புர மனோஜ்.. இந்த உலகத்துல பெரிய சக்தினா அது தெய்வ சக்திதான். இந்த பில்லி சூனியத்தையெல்லாம் நம்புரனா கடவுள் மேல உனக்கு நம்பிக்கை இல்லைனு அர்த்தம். இதுக்குதான் உன்ன படிக்க வச்சேனா என்று கேட்கிறார்.
இதற்கு விஜயா “இதுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? இவன் மேல பொறாமப்பட்டு யாரோதான் இப்டி செஞ்சுருக்காங்க.” என்று கூறுகிறார்.
கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் கடை சாவியை வாங்க வருகிறார். அப்போது அவர் ”கடை வாசலில் இருந்த முட்டை ஏடிஎமில் வேலை பார்க்கும் தாத்தாவோடது” என்கிறார். உடனே அவருக்கு என் மேல் என்ன காண்டு என்று மனோஜ் கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல, மழைக்கு நம்ம கடை பக்கம் ஒதுங்கியிருக்கிறார். வீட்டுக்கு முட்டை வாங்கியிருந்தார். அப்போது அவர் பேரன் போர் அடிக்குதுனு அதுல கண்ணு மூக்குல வரஞ்சுருக்கான்.” என்றனர்.
இதைக் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைந்தது.