குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

GBU
GBU
Published on

சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டிய அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. எப்போது என்று பார்ப்போமா?

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்ற தகவல் வந்தது. இப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டது. மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழுத் தெரிவித்தது. ஆனால் அதுவும் தள்ளிப்போனது.

இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்தநிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்படியான நிலையில், இவரின் அடுத்த படமான குட் பேட் அக்லி ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நின்றது. இதற்கு மற்றொரு காரணம் அஜித்தான். விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை நம்பியிருக்கிறார்கள்.

இந்த வருடம் ஜனவரியே ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடாமுயற்சி படமே தாமதமாக ரிலீஸானதால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது.

ஆனால், படம் எதிர்பார்த்தைவிட நன்றாகவே ஓடியது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே நன்றாக வைப் செய்தார்கள். அதற்கு முக்கிய காரண ம் அஜித் குமார் என்றால், மற்றொரு முக்கிய காரணம் அர்ஜுன் தாஸ்.

இப்படியான நிலையில்தான் குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. குட் பேட் அட்லி படத்தை நெட்பிளிக்ஸ் கைபற்றி இருந்தது. அதன்படி மே 8 ஆம் தேதி ஓடிடிக்கு இப்படம் வர இருக்கிறது. ரசிகர்கள் என்ன தான் இந்த படத்தை பலமுறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதனால் ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? இதை படியுங்கள்... தெளிவு பிறக்கும்!
GBU

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com