சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில் சக்திக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைப்பதற்கான ப்ளானை போட ஆரம்பித்துவிட்டார்கள்.
எதிர்நீச்சல் 1 சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தினால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலை விரும்பிப் பார்த்தார்கள். அதில் ‘ஏமா ஏய்’ என்ற வசனம் சமூக வலைதளங்கள் எங்கும் இருந்தன. அதுமட்டுமின்றி குணசேகரனின் ஒவ்வொரு வசனங்களும் பிரபலமாகின. 6 மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலின் 2ம் பாகம் தொடங்கியது.
முதல் சீசனில் குணசேகரன் கைது செய்யப்பட்டார். பின் இரண்டாம் பாகம் பாதி வரை சிறையிலிருந்தே குணசேகரன் பல வேலைகளை செய்து வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு குணசேகரன் ரிலீஸாகி வந்ததும், வீட்டிலிருந்த மருமகள்கள் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டார்கள்.
தர்ஷனின் திருமணம் குறித்தான கதைதான் நகர்ந்து வருகிறது. மறுபக்கம் குணசேகரன் தனது தம்பி சக்தியையும் தன் வசம் கொண்டு வந்துவிட்டார். சக்தி மட்டும்தான் வீட்டிலிருந்த பெண்களுக்கு துணையாக இருந்து வந்தார். ஆனால், தற்போது அவரும் அவர்களுக்கு எதிராக மாறிவிட்டார்.
தர்ஷன் திருமணத்திற்கு அவர் ஆதரவு தர ஆரம்பித்துவிட்டார்.
கல்யாண டெக்ரேஷனை பார்க்க சக்தியை அனுப்பி வைக்கிறார்கள். அங்கே இருந்த பெண் சக்தியை விரும்பிய பழைய காதலி. இருவரும் மீண்டும் பழக ஆரம்பிக்கிறார்கள். அந்த பெண் சக்தியை பிஸினஸ் பார்ட்னராக ஆக்குகிறார்.
சக்திக்கு தெரியாமல் இந்த விஷயத்தை வீட்டில் வந்து கூறுகிறார். சக்தி இது அறிந்து ஆச்சர்யப்படுகிறார். சக்திக்கு இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்திருக்கலாம் என அறிவுக்கரசி பிட்டுகளை போடுகிறார்.
மேலும் அந்த பெண்ணை பற்றி பேசி புகழ்ந்து தள்ளுகிறார்.
ஆனால், சக்தி பொறுத்து பொறுத்துப் பார்த்து அறிவுக்கரசியிடம் கோபமாக பேசுகிறார். “இருந்தாலும் சக்திக்கு அவர் பொண்டாட்டி மேல ரொம்ப பாசம் தான்” என்று அறிவுகரசி கூறியதும், சக்தி, “ எங்க வீட்டு விஷயத்துல தலையிடாதீங்க.” என்று கோபமாக கூறிவிடுகிறார்.
அறிவுக்கரசி வாயடைத்துப் போய்விட்டார்.