
சந்தனம் விலை உயர்ந்தது. ஆனால், அதை நாம் பூஜைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம் என நினைத்துக் கொண்டிருப்போம். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடல் அழகு பெறவும் சந்தனம் பெரும் உதவியாக உள்ளது.
கடையில் விற்பது எல்லாமும் ஒரிஜினல் சந்தனம் அல்ல. நாம் சந்தனத்தை ஒரிஜினலாக வாங்க வேண்டும். அல்லது சந்தன கட்டை வாங்கி அதை இழைத்து அதிலிருந்து எடுக்கப்படும் சந்தனமே ஒரிஜினல் சந்தனம். இதுதான் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் பயன்படும்.
சந்தனத்துக்கு இருக்கும் மருத்துவ குணங்கள் ஓரளவுக்கு நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதில் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள் நம் சருமத்திற்கு எப்படியெல்லாம் சந்தனம் பயன்படுகிறது என்பதை பற்றி எல்லாம் நீங்கள் எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் இதோ இப்ப பதிவில் இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உடலின் குளிர்ச்சிக்கும், சருமத்தின் பாதுகாப்புக்கும் இன்றியமையாதது சந்தனம். இந்திய மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தன மரம். இந்த மரத்தில் உள்ள அனைத்துமே நமக்குபயன்படுகின்றன. சந்தனக்கட்யை பழச்சாற்றில் கரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளுக்கு பூசினால் குணமடையும். புருவத்தின் வலிகளுக்கு பற்று போடலாம்.
சந்தனாதித் தைலம் தேய்த்து தலை முழுகி வர, உடல் சூடு தணியும். இதிலிருந்து தயாரிக்கப்படும் களிம்புகள் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. பக்கவாதம், முடக்குவாதம், அஜீரணம் எனப் பல நோய்களைப் போக்கும். மேல் பூச்சாக சரும வியாதிகளைப் போக்கும். தளர்ந்த சருமத்திற்கு இறுக்கமளிக்கும்.
பாலுணர்வை ஊக்குவிக்கும். உலர்ந்த மரக்கட்டைகள் பொடியாக்கப்பட்டு நீருடன் சேர்த்து கொப்பளங்களுக்கு களிம்பாகவும், சரும வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணை சரும வியாதியை குணப்படுத்தும்.
தலையில் அரைத்துப்பூசினால் தலைவலி, வெயில் காலத்தில் ஏற்படும் கட்டிகள், அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இருதயத்திற்கும் உள்ள பலவீனம் நீங்கும். சந்தனம் ரத்தத்தை சுத்திகரித்து, தேகத்தை குளிர்ப்பித்து, மார்புத்துடிப்பு, மனபயம் முதலியவற்றை குணப்படுத்தும்.
சந்தனக்கட்டையை எலுமிச்சை பழச்சாற்றுடன் அரைத்து தடவ நமைச்சல், சொறி, சிரங்கு, அக்கி, படர் தாமரை, வீக்கம், தேமல் ஆகியவை குணமாகும்.
ஒரிஜினல் சந்தனமாக வாங்கி அதை மேற்கண்டவாறு பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்பதை மட்டும் நினைவில்கொள்ளுங்கள். உங்கள் ஊரில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் ஒரிஜினல் சந்தன கட்டைகள் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள்.