எதிர்நீச்சல் 2 சீரியலில் குணசேகரன் அமைதியாக இருந்து அனைத்து வேலையும் செய்து வன்மத்தைக் கொட்டி வருகிறார். இன்றைய எபிசோட் குறித்துப் பார்ப்போமா?
இப்போது குணசேகரனின் முழு டார்கட் ஜனனிதான். சக்தியின் வாழ்க்கையிலிருந்து ஜனனியை எப்படியாவது துறத்திவிட வேண்டும் என்று நிறைய வேலையை செய்கிறார். அதற்காக குந்தவையை இறக்கியிருக்கிறார். குந்தவை மூலம் சக்திக்கு ஒரு பிஸினஸ்ஸை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவ்வப்போது சக்தி வாழ்க்கைக்குள் நுழைந்து சக்தி மனசை மாற்றுவதற்கு குந்தவை குணசேகரன் போட்ட பிளான் படி செயல்படுகிறார்.
இப்படியான நிலையில்தான் குணசேகரன் குடும்பத்தில் அனைவரும் பரிகாரம் செய்ய கோவிலுக்கு போன நேரத்தில் ப்ளான் செய்து ஜனனியை மாட்டி விட்டிருக்கிறார்கள். ஹீட்டர் வெடித்து புகை பரவும் ரூமில் மாட்டிக் கொண்டு ஜனனி அவஸ்தப்பட்ட நிலையில் அங்கே வந்த குற்றவை ஜனனியை காப்பாற்றி விட்டார். பிறகு ஈஸ்வரிக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்லிவிட்டார்.
மேலும் இதற்கு குணசேகரன்தான் காரணம் என்று சொல்லி, குற்றவை ஜட்ஜ் முன்னாடி குணசேகரனை நிப்பாட்டுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டார்.
ஆனால், குணசேகரன் லாயர் அனைத்தை ஏற்பாடுகளையும் செய்து, குணசேகரனை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார். செம்ம கோபத்தில் வீட்டுக்கு வரும் குணசேகரன், ஜனனி மீதுதான் கடும்கோபமாக வருகிறார்.
இதனையடுத்து இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், குணசேகரனின் நேரம் எதிர்மறையாக இருப்பதாகவும், என்ன நினைத்தாலும் அது நடக்காது என்றும் ஜோசியக்காரர் கூறுகிறார்.
பின் குணசேகரனிடம் நேருக்கு நேராக ஜனனி பேசுகிறார். அதாவது உங்கள அவமானப்படுத்த நாங்க நினைக்கல, ஆனால் எங்கள பழி வாங்கனும்னு நீங்க உறுதியா இருக்கீங்க என்று ஜனனி சொல்கிறார். இதற்கு எதுவும் பேசாமல் எழுந்த குணசேகரன், போகும்போது ஜனனி வாக்கிங் ஸ்டிக்கை லேசாக தள்ளிவிடுகிறார். இதனால், ஜனனி கீழே விழுந்து வலியில் துடிக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளுடன் நகரும் என எதிர்பார்க்கலாம்.