யாரும் எந்த முயற்சியும் எடுக்காமல் குணசேகரன் மீண்டும் கைது செய்யப்படுகிறார். ஆனால், வீணாக பழி ஜனனி மீது விழப்போகிறது. இதனால் சக்தி கடும்கோபம் கொள்ளப்போகிறார் என்பது மட்டும் உண்மை.
எதிர்நீச்சல் 1 சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தினால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலை விரும்பிப் பார்த்தார்கள். அதில் ‘ஏமா ஏய்’ என்ற வசனம் சமூக வலைதளங்கள் எங்கும் இருந்தன. அதுமட்டுமின்றி குணசேகரனின் ஒவ்வொரு வசனங்களும் பிரபலமாகின. 6 மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலின் 2ம் பாகம் தொடங்கியது.
முதல் சீசனில் குணசேகரன் கைது செய்யப்பட்டார். பின் இரண்டாம் பாகம் பாதி வரை சிறையிலிருந்தே குணசேகரன் பல வேலைகளை செய்து வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு குணசேகரன் ரிலீஸாகி வந்ததும், வீட்டிலிருந்த மருமகள்கள் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டார்கள்.
இப்படியான நிலையில், குணசேகரன் தான் சாதிக்க எண்ணிய விஷயத்தை மணிவிழாவில் பெருத்த அடியை வாங்கப் போகிறார். தான் என்ன பண்ணினாலும் தம்பிகள் ஆமாம் சாமி போடுற மாதிரி மற்றவர்களும் போடுவாங்க என்று தப்பு கணக்கு போட்டு விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரன் கண் முன் ஜெயித்து காட்ட வேண்டும் என்று நினைத்த பெண்களும் தற்போது எல்லாத்துக்கும் தலையாட்டி வருகிறார்கள்.
மறுபக்கம் ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி மூவரும் ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், கணவர்கள் என்று வரும்போது அந்த வீட்ல எங்களுக்கு என்ன இருக்கிறது யாரு எங்களுக்கு இருக்கிறார் என்று டயலாக் போட்டு மெயின்டெயின் பண்ணிக்கிறாங்க.
இப்படியான நிலையில்தான், குணசேகரன் நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் நடக்கவிருக்கிறது. மணிவிழாவுக்கு தயாராகிய குணசேகரன், மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போக போலீஸ் வரப் போகிறார்கள். அதாவது பரோலில் வந்திருக்கும் குணசேகரனுக்கு பரோல் முடிந்து விட்டதால் போலீஸ் வந்து குணசேகரனை கூட்டிட்டு போகப் போகிறார்கள்.
இதற்கு காரணம் ஜனனிதான் என்று சக்தி கோப படப்போகிறார். ஏற்கனவே இருவருக்குள்ளும் சுமூகமான உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.