
உபரத்தினக் கற்களில் ஒன்றாக அமையும் ஓபல் ஒரு அற்புதக் கல்லாகும். இது சிலிக்கானும் தண்ணீரும் அதிகம் உடையது. இதன் ஹார்ட்னெஸ் எனப்படும் கடினத்தன்மை 5.5 முதல் 6.5 வரை ஆகும்.
அற்புதமான வண்ணக்கலவைகளை உடையது ஓபல்.
தீ ஓபல் (FIRE OPAL) என்ற கல்லைப் பார்த்தால் கல்லின் உள்ளே ஒரு தீ ஆறு ஓடுவது போலத் தோன்றும்.
வானவில்லின் வர்ணஜாலங்களைத் தன்னுள்ளே காட்டுவதும் இந்த ஓபல் தான்.
பச்சை ஓபல் (GREEN OPAL) என்ற ஓபல் கல்லின் உள்ளே பச்சை நிறத்தை முப்பரிமாண கோணத்தில் காணலாம். பல வண்ண ஓபல் (MULTI COLOUR OPAL) என்பது நிறைய வண்ணங்களை அள்ளி வீசும்.
இது நெற்றிக் கண் சக்கரத்துடன் தொடர்பு கொண்டதாக யோகா நிபுணர்கள் கூறுவர்.
பார்ப்பதற்கு மிகவும் அழகான இது கண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கண்களுக்கு பிரகாசத்தை அளித்து கண்னை வலுப்படுத்தும். கண் பார்வை ஸ்டோன் என்பதால் இதை அணிந்து கண்களில் உள்ள கோளாறுகளைக் களைந்து நல்ல பார்வையைப் பெற முடியும்.
அது மட்டுமல்ல, நினைவாற்றலை இது நன்கு ஊக்குவித்து வளர்க்கும். நியூரோ டிரான்ஸ்மிட்டர் கோளாறுகளை நீக்கும்.
ஒளிவட்டம் எனப்படும் நமது அவுராவை இது பிரகாசிக்க வைத்து ஆற்றலை வெகுவாக மேம்படுத்தும். இது உடல் மற்றும் ஆன்மீக குணாதிசயங்களைத் தூண்டி உயரிய ஆன்மீக நிலையையும் தரும்.
இதில் பத்து வித வகைகள் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் இவற்றின் குணாதிசயங்கள் சற்றே வேறுபட்டவையாக இருக்கும்.
இது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். சந்தோஷம் தரும். பாராட்டுகளை வாங்கித் தரும். நல்ல உணர்வுடன் ஆரோக்கியமாக இருக்கும் மகிழ்ச்சியை தரும்.
நமது பாரதத்தின் நவரத்தின சாஸ்திரப்படி இது உபலகம் என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிட வல்லுநர்கள், லிப்ரா ராசிக்காரர்கள் அணிய வேண்டிய கல் இது என்று கூறுகின்றனர். (செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரை பிறப்பவர்கள் LIBRA ராசிக்காரர்கள்).
எட்கர் கேஸ் என்ற பிரபல அதீத உளவியல் நிபுணர் இதை உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும் கல் என்று வர்ணிக்கிறார்.
இதயத்திற்கு சக்தியைத் தரும் இந்தக் கல் சுலபமாக மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் தருகிறது.
விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஓபலை அணிந்தால் அது உடனே தன் பிரகாசத்தை இழக்கும். நல்ல நண்பர்களின் கூட்டுறவில் இது கூடுதலாகப் பிரகாசிக்கும்.
பதினான்காவது நூற்றாண்டில் ஒரு கோர சம்பவம் லண்டனில் நடைபெற்றது. அங்கு ப்ளேக் நோய் தாண்டவமாட பல லட்சம் பேர் மாண்டனர்.
நோயிலிருந்து தப்பித்த அனைவரும் ஓபல் கல்லைத் தன் கைகளில் அணிந்திருந்ததாக லிண்டா க்ளார்க் என்னும் ஜெம்மாலஜிஸ்ட் கூறுகிறார்.
நமக்குத் தெரிந்த நல்ல நிபுணரிடமிருந்தோ அல்லது கடைக்காரரிடமிருந்தோ இதை வாங்கி அணிய வேண்டும்.
இதை அணிந்தோருக்குத்தான் ஓபலின் ஓஹோ என்ற புகழும் சக்தியும்..