வேக வேகமாக முடிக்கப்படும் குக் வித் கோமாளி… Semi Final Round ப்ரோமோ வெளியீடு!

CWC semi final
CWC
Published on

அனைவருக்கும் பிடித்தமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறது. இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைனல் ரவுண்ட் இந்த வாரம் நடைபெறவிருக்கிறது. இதற்கான ப்ரோமோவை  வெளியிட்டது விஜய் டிவி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாவது சீசன் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது. கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நகரந்தது. இந்த சீசனில் ஏராளமான வித்தியாசமான சுற்றுகள் வைக்கப்பட்டன.

குடும்பச்சுற்று, வெளிநாட்டவர்கள் சுற்று, பாட்டிகள் மற்றும் குட்டீஸ்கள் ரவுண்ட் என மிகவும் கலகலப்பாகச் சென்றது. அதேபோல், சில படக்குழுக்களும் வந்து நிகழ்ச்சியை கோலாகலப்படுத்தினர். முதலில் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை எவிக்ஸன் இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வந்தனர். அதாவது இரண்டு வாரங்களுக்கு ஒரு எவிக்ஸன் என கொண்டுவந்தனர். போன வாரம் எவிக்ஸன் ரவுண்டில் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர். விடிவி கணேஷ் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினர்.

இப்போது நான்கு போட்டியாளர்களே மீதமுள்ளனர். சுஜிதா, பிரியங்கா, அக்ஷய் கமல் மற்றும் இர்ஃபான் ஆகியோர் செமி ஃபைனல் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அந்தவகையில் இந்த வாரம் செமி ஃபைனல் சுற்று நடைபெறவுள்ளது. இதிலிருந்து மூன்று பேர் Direct final செல்வர். அதற்கு அடுத்த வாரம் wild card சுற்று நடைபெறும். அதில் ஒருவர் ஃபைனல் செல்வார்.

இதையும் படியுங்கள்:
ஆலாபனை அரசியின் நீங்கா நினைவலைகள்!
CWC semi final

ஆகமொத்தம் நான்கு பேர் ஃபைனல் ரவுண்டுக்கு முன்னேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விதிமுறைகள் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றப்படும் என்பதால், இந்த வாரம் செமி ஃபைனல் ரவுண்டு வரை காத்திருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறுதி திட்டத்தை வெளிப்படுத்திவிடுவர்.

இன்னும் இரண்டே வாரங்களில் வேக வேகமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முடிக்கவுள்ளனர். ஏனெனில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடர் ஆரம்பமாகவுள்ளதல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com