
விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ‘குக் வித் கோமாளிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் 5 சீசன்களாக வெற்றிநடை போட்டு மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தது என்றே சொல்லலாம். முதல் சீசனுக்கு எந்தளவு ரசிகர்கள் இடையே வரவேற்பு இருந்ததோ அதேயளவு 6வது சீசனுக்கு உள்ளது என்றால் அது மிகையாகாது. தற்போது ‘குக் வித் கோமாளி’ 6-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
6-வது சீசனில் முதலில் சௌந்தர்யா எலிமினேட்டாகி வெளியேற அதனை தொடர்ந்து இரண்டாவதாக கஞ்சா கருப்பு, மூன்றாவதாக சுந்தரி அக்காவும் நடையை கட்டினர்.
தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ள நிலையில் இந்த வாரம் அடுத்த எலிமினேஷன் யாராக இருக்கும் என்று டென்ஷன் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது.
ஏனெனில் ஏழு போட்டியாளர்களுமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு சளைக்காமல் பெஸ்டாக சமைத்து வரும் நிலையில் இன்றும், நாளையும்(ஆகஸ்ட் 9-ம்தேதி, 10-ம்தேதி) நடக்கும் நிகழ்ச்சியில் யார் எலிமினேஷனாகி வெளியேறப்போகிறார்கள் என்று தெரிந்து விடும்.
அதுமட்டுமின்றி இன்றைய எலிமினேஷன் ரவுட்டு ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அதிரடியாக ஒரு ப்ரோமோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த ப்ரோமோவில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கடந்த 5 சீசன்களாக நடக்காத புதுமையாக பேன்ட்ரியை மூடியுள்ளனர். இதனால் போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சீக்ரெட் பாக்ஸ் என்ற ஒரு பெட்டியையும் வைத்துள்ளனர். அந்த பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து தான் இந்த வாரம் போட்டியாளர்கள் சமைக்க வேண்டும் என்பது போல் ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது. பேன்ட்ரியை மூடியாச்சி, சீக்ரெட் பாக்ஸில் இருக்கும் பொருட்களை வைத்து மட்டுமே சமைக்க வேண்டும் என்பதால் இந்த வாரம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமின்றி இந்த வாரம் எலிமினேஷன் வேறு இருப்பதால் போட்டியாளர்கள் இடையே போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
தற்போது, இதுதொடர்பான ப்ரோமோ வெளியாகி வைரலான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்வு அதிகரித்துள்ளது
‘குக் வித் கோமாளி’ விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.