
ரியாலட்டி ஷோக்கள் மூலம் அதிகளவு ரசிகர்களை கவர்ந்து வரும் ஒரே சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அந்த வகையில் மக்களை கவரும் வகையில் புதுப்புது ரியாலட்டி ஷோக்களையும், சீரியல்களையும் களத்தில் இறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது விஜய் டிவி. மற்ற சேனல்களை ஒப்பிடும் போது விஜய் டிவியில் வரும் அது இது எது, கலக்கப்போவது யாரு,பிக் பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை மறக்கவே முடியாது.
மனஅழுத்தம், கவலையில் உள்ளவர்கள் விஜய் டிவியில் வரும் ஷோக்களை பார்த்தால் கண்டிப்பாக அவர்களது கவலையை மறந்து மனசு லேசாகிவிடும் என்பது ரசிகர்களின் கருத்தாகவே உள்ளது.
விஜய் டிவியில் வரும் அனைத்து ஷோக்களுமே ரசிகர்களுக்கு என்டர்டைன்மெண்டாக இருந்தாலும் அதில் ‘குக் வித் கோமாளி’ முதன்மை இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாட முக்கியமான காரணம், இந்த நிகழ்ச்சியில் சமைக்க கலந்து கொள்ளும் போட்டியாளர்களை அவர்களுக்காக நியமிக்கப்பட்ட கோமாளிகள் போட்டியாளர்களின் டாஸ்க்களை செய்யவிடாமல் தடுப்பதற்காக கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் ரசிக்கும் படி இருப்பதால் தான்.
ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் குக்வித் கோமாளி 6-வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருவதுடம் தற்போது இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களும், கோமாளிகளும் இதன்மூலம் பெரிய அளவில் புகழும் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கோமாளியாக களம் இறங்கிய சிவாங்கி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி 4-வது சீசனில் டைட்டல் வின்னரானது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கொண்டாடும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பார்த்து அதற்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கப்பட்டது தான் ‘டாப் குக் டூப்பு குக்கு 1’ நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஒரே சமயத்தில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு இதுவரை சன் டிவியில் ‘டாப் குக் டூப்பு குக் 1’ நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4 சீசன்களாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் ‘டாப் குக் டூப்பு குக்கு 1’ நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.
அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.
வெங்கடேஷ் பட் சன் டிவியில் டாப் குக் டூப்பு குக் நிகழ்ச்சிக்கு மாறிய போதிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மட்டுமே மக்கள் முழு ஆதரவையும் கொடுத்த காரணத்தால் பெருசாக சொல்லும்படி டாப் குக் டூப்பு குக்கு 1 வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி முடிந்தவுடன், சன் டிவியில் ‘டாப் குக் டூப்பு குக்கு’ 2 நிகழ்ச்சியை ஆரம்பித்து விடலாம் என்று பிளான் பண்ணியிருக்கிறார்கள். அப்போது தான் அதிகளவு ரசிகர்களை கவர முடியும் என சன் டிவி நினைக்கிறது.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் டாப் குக்கு டூப் குக்கு 2 ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று வெங்கட் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் டாப் குக் டூப்பு குக்கு 2வில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.