சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் பற்றிய ஒரு கழுகு பார்வை..!

Chinnathirai
Chinnathirai
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழ் சின்னத்திரையில் டான்ஸ், காமெடி, விளையாட்டு மற்றும் திறமைக்கான போட்டிகள் என பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. சின்னத்திரை ரசிகர்களின் பட்டாளம் இவற்றைப் பார்ப்பதற்கு கூடிக் கொண்டே வருகிறது. சினிமா ரசிகர்களுக்கு இப்போது சினிமா படங்கள் மட்டுமல்ல, சின்னத்திரையில் வரும் சீரியல்களும் பிடித்துப் போகிறது. புதுப் படங்களைக் காண ஆர்வம் காட்டும் ரசிகர்களைத் தாண்டி இப்போதெல்லாம் சின்னத்திரையில் என்ன ஷோ புதிதாக ஆரம்பித்துள்ளது, புதிய சீரியல்கள் என்னென்ன, எந்த தொலைக்காட்சியில் வருகிறது என்பதைக் காண்பதற்குத் தான் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சின்னத்திரையில் தற்போது பல்வேறு சுவாரசியமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகள் மக்களை ஈர்ப்பதற்காக புத்தம் புதிய சீரியல்களைக் களம் இறங்குவதுடன் ரியாலிட்டி ஷோக்களையும் இறக்கி மக்களை தொலைக்காட்சி பக்கம் ஈர்ப்பதற்கு நிறைய மெனக்கிடுகிறார்கள். பிக் பாஸ்(Bigg Boss), குக் வித் கோமாளி(Cook with Comali) போன்ற மெகா ஹிட் நிகழ்ச்சிகளும் புதிய சீசன்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப போன்ற ரியாலிட்டி ஷோக்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று முதன்மையாக ஒளிபரப்பாகி வருகின்றன.

விஜய் டிவி அதன் கலகலப்பான மற்றும் இளைஞர்களைக் கவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது. விஜய் டிவியில் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற சர்வைவல் கேம் ஷோவான பிக் பாஸ் தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த பரபரப்பான ரியாலிட்டி ஷோவில் நூறு நாட்கள் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதும், மக்களின் வாக்குகளால் வெளியேற்றப்படும் நடைமுறையையும் இந்த நிகழ்ச்சி கொண்டு சுவாரசியம் நிறைந்ததாக உள்ளது.

பிரபலங்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் இணைந்து சமைக்கும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நகைச்சுவையும் சமையலும் கலந்த குடும்ப பொழுதுபோக்கு நிகழ்ச்சியான இது அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளது. நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் இசை மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளான ஸ்டார்ட் மியூசிக் / சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன. சிறந்த பாடகர்களை தேர்ந்தெடுக்கும் நீண்ட கால இசை போட்டியான சூப்பர் சிங்கர் மக்களின் இதயங்களை வென்று பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

ஜீ தமிழில் நடனத் திறமையை வெளிப்படுத்தும் முன்னணி ரியாலிட்டி ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ்(Dance Jodi Dance) மக்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்ளும் மிகவும் பிரபலமான இசைப் போட்டியான ச ரி க ம ப (Sa Re Ga Ma Pa) மற்றும் கில்லாடி ஜோடிகள் என்ற பெயரில் தம்பதிகளுக்கான சுவாரசியமான விளையாட்டுப் போட்டிகளும் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

சன் டிவியில் சமையலை அடிப்படையாகக் கொண்ட புதிய சுவாரசியமான நிகழ்ச்சியான 'குக் வித் கிச்சன் கலாட்டா' சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது. அதேபோல் 'நாங்க ரெடி நீங்க ரெடியா' என்ற கேம் ஷோ சுவாரஸ்யமாக இருக்கிறது. இவை பார்வையாளர்கள் மற்றும் குடும்பங்கள் கலந்து கொள்ளும் முக்கியமான கேம் ஷோவாக உள்ளது. காலை நேர நேர்காணல்கள் மற்றும் சமையல் நிகழ்ச்சிகள் (வணக்கம் தமிழா, சூப்பர் சமையல்) போன்றவை மக்களின் பேராதரவை பெற்று விரும்பி பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் நிஜ வாழ்க்கை துணைகளுடன் களம் இறங்கும் நட்சத்திரங்கள் ஒளிபரப்பாகும் ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்(Happy Wife Happy Life) தம்பதிகளின் பொறுமை மற்றும் புரிதலை சோதிக்கும் கலகலப்பான பிரம்மாண்டமான போட்டி நிகழ்ச்சியாகும்.

இதையும் படியுங்கள்:
FACES திரைப்பட விமர்சனம்: காதலன் முகமே மறந்துபோனால் என்னவாகும்?
Chinnathirai
logo
Kalki Online
kalkionline.com