

06/03/2026 முதல் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் தமிழ் டப்பிங்க் உடன் 29/05/2026 முதல் காணக்கிடைக்கிறது. இது ஒரு லோ பட்ஜெட் படம். ஸ்லோவாகப் போகும் மெலோ டிராமா.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி, நாயகன் இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஸ் சிப்பில் வாழ்பவர்கள்.
வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து நாயகிக்குக் காயம் ஏற்படுகிறது. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்படுகிறார். தலையில் அடிபட்டதால். கடந்த சில நாட்களாக நடந்த சம்பவம் எதுவும் நாயகிக்கு நினைவில் இல்லை.
Face blindness Disorder என்னும் பிரச்சனையும் நாயகிக்கு ஏற்படுகிறது. அதாவது நாயகி முன் எந்த ஆண் வந்தாலும் அவர் கண்ணுக்குத் தன் காதலன் ஆகவே தெரிகிறார்.
பாட்ஷா படத்தில் நீ நடந்தால் நடை அழகு பாடல் காட்சியில் சர்வர், பஸ் கண்டக்டர், போலீஸ் என யாரைப்பார்த்தாலும் நக்மாவுக்கு ரஜினி முகம் தெரிவது போல படம் முழுக்கவே நாயகிக்கு யாரைப் பார்த்தாலும் நாயகன் போலவே தெரிகிறது.
நாயகன் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. நாயகியைப் பார்க்க வரவும் இல்லை. அவரைப் பற்றிய தகவலும் இல்லை.
நாயகன் என்ன ஆனார் என்று கேட்டு நாயகனின் அண்ணன் நாயகியிடம் வந்து கேட்கிறார்.
நாயகனை நாயகி தான் ஏதோ தகறாரில் கொலை செய்திருப்பாரோ? என்று சந்தேகம்.
இதற்குப்பின் கதையில் நிகழும் திருப்பஙகள் தான் மீதித் திரைக்கதை.
நாயகி நித்யாவாக மொத்தப் படத்தையும் தாங்கி நிற்பவர் டாக்டர் ஹென்னா ரெஜி கோஷி. களையான முகம். நல்ல நடிப்பு. சோனியா அகர்வால் சாயல் இவருக்கு.
நாயகனாக காலேஷ் ராமானந்த் சுமாரான நடிப்பு.
படத்தில் நடித்த மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பரவாயில்லை ரகம்.
இருவர் உதவியுடன் திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் இ கே நீலேஷ்.
சபாஷ் டைரக்டர்
யாரைப் பார்த்தாலும் காதலன் முகமாகத் தெரிகிறது என்ற கான்செப்ட் புதியது.
நாயகியின் நடிப்பு படத்தின் ஜீவன்.
நாயகியை ஒரு தலையாகக் காதலிக்கும் சஞ்சீவ் அல்லது நாயகியின் தோழி காவ்யா இருவரில் ஒருவர் வில்லன் ஆகவோ வில்லி ஆகவோ மாறுவார்கள் என எதிர்பார்க்க வைத்தது.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
நாயகனின் முகத்தையே படம் முழுக்கப் பார்க்க போர் அடிக்கிறது. யாரைப் பார்த்தாலும் நாயகனைப் போலவே தெரிகிறது என்ற கான்செப்ட் ஓக்கே முதல் 10 நிமிடம் சுவராஸ்யம். அதற்குப்பின் கடுப்பு.
யூகிக்கக்கூடிய திரைக்கதை
ஒரே மாதிரி காட்சிகள் ரிப்பீட் ஆவது
கடந்த காலம், நிகழ் காலம் என மாறி மாறி நான் லீனியர் கட்-டில் கதை சொன்ன விதம் எடுபடவில்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - நாயகியின் நடிப்புக்காக மட்டுமே பார்க்க முடிகிற ஸ்லோ பேஸ் திரில்லர் டிராமா.