

திரையரங்கை காட்டிலும் ஓடிடி ரசிகர்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகே இந்த ஓடிடி ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. என்னதான் தியேட்டரில் படம் பார்த்தாலும் கூட அனைவரும் வீடுகளில் ஆர அமர உட்கார்ந்து பார்க்க பலரும் விரும்புகின்றனர். தியேட்டரில் எப்படி ஒரு வித அனுபவத்தை கொடுக்குமோ, விளம்பரமின்றி இடைவிடாது ஓடிடியில் பார்ப்பதையும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஒவ்வொரு வார இறுதியிலும் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடி தளங்கள் வெளியாகுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று பார்க்கலாம் வாங்க..
இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம் “பைசன்”. இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்த இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி, அழகம் பெருமாள், அருவி மதன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பைசன் காளமாடன் என பெயரிடப்பட்ட இப்படத்தின் அனைத்து பாடல்களையும் மாரி செல்வராஜ் எழுதியிருந்தார். பைசன் திரைப்படம் நவம்பர் 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்று நள்ளிரவு 12 மணி முதல் இப்படத்தை காண முடியும்.
பேக் டு பிளாக்
ஆங்கில பாடகி மற்றும் பாடலாசிரியர் ஏமி வைன்ஹவுஸின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இது, நவம்பர் 17 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. மரிசா அபேலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எ மேன் ஆன் தி இன்சைட் சீசன் 2
டெட் டான்சன் நடிக்கும் இந்த கிரைம் காமெடி சீசன் 2-ல், சார்லஸ் என்ற கதாபாத்திரம் கல்லூரி வளாகத்தில் ரகசிய உளவாளியாக நுழைந்து மர்மங்களை வெளிக்கொணர்கிறார். இது நவம்பர் 20 முதல் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
ஷாம்ப்பெயின் பிராப்ளம்ஸ்
மிங்கா கெல்லி, டாம் வோஸ்னிக்ஸ்கா மற்றும் திபால்ட் டி மொன்டலெம்பர்ட் நடித்த இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம், நவம்பர் 19 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகிறது.
நடு சென்டர்
நரு நாராயணன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் நடு சென்டர். இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூடைப் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிக்குமார், ஆஷா சரத், கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நவம்பர் 20ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஒன் ஷாட் வித் எட் ஷீரன்: எ மியூசிக் எக்ஸ்பீரியன்ஸ்
எட் ஷீரன் நியூயார்க் நகரில் ஒரு மணி நேரம் தொடர்ச்சியான லாங் ஷாட்டில் தனது ஹிட் பாடல்களைப் பாடும் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சி, நவம்பர் 21 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தி பெங்கால் ஃபைல்ஸ்
விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இப்படம், 1946ல் மேற்கு வங்கத்தில் நடந்த இந்து இனப்படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்ட இப்படம், நவம்பர் 21 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.