ராம் சரணின் கேம் சேஞ்சர் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு! ஓடிடி தளத்திலாவது...?

கேம் சேஞ்சர்
கேம் சேஞ்சர்
Published on

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞர் படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகியது. இந்த படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடிகர் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது. ஒரு வழியாக 2025ஆம் ஆண்டு இந்த படத்தை மக்களிடையே கொண்டு சேர்த்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்த படத்தை தில் ராஜூ தயாரித்த நிலையில், தமன் இசையமைத்தார். தெலுங்கில் உருவான இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்டது. படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.200 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படத்தின் பட்ஜெட்டை வசூலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விஜய்யின் கடைசி படம்... ஜனவரியில் வரும் மாஸ் அப்டேட்... ரசிகர்கள் குஷி!
கேம் சேஞ்சர்

இந்நிலையில் இந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது காதலர் தின ஸ்பெஷலாக இந்த படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ராம் சரண் தேதிகள் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் வரிசையாக இந்தியன் 2, கேம் சேஞ்சர் எடுத்து வந்த நிலையில், இந்த 2 படங்களும் மாறி மாறி வெளியானது. இந்த 2 படங்களும் ஷங்கருக்கு தோல்வியை கொடுத்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே இந்தியன் 2 அடி வாங்கிய நிலையில், தற்போது இந்த படமும் ஃப்ளாப் ஆகியுள்ளது. இந்த நிலையில் ஓடிடி தளத்திலாவது இந்த படம் வெற்றியை பெறுமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com