பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் எழிலுக்கும் பாட்டிக்கும் சண்டை முற்றுகிறது.
1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.
ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார். போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சாட்சிகள் அனைத்தும் ஈஸ்வரிக்கு எதிராக திரும்ப கடைசி நேரத்தில் பாக்கியா மயூவை அழைத்து வந்து சாட்சி சொல்ல சொன்னார். அதில் ஈஸ்வரி நிரபராதி என நிரூபணமானதால் அவரை கோர்ட் ரிலீஸ் செய்தது. தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் நடந்த விஷயத்தை மயூவிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார் ராதிகா. மேலும் கமலாவை திட்டி தீர்க்கிறார். என்னை எல்லாரும் அசிங்க படுத்துறீங்களா என்று. தொடர்ந்து அம்மாவை பாக்க போன கோபிக்கு அசிங்கமே மிஞ்சியது. கடுப்பான ஈஸ்வரி கோபியை தலைமுழுகிவிட்டார்.
தற்போது கதையில் ஜெனி கர்ப்பமாக இருக்க, ஈஸ்வரி மீண்டும் அமிர்தாவிடம் குழந்தை பெற்றுகொள்ள சொல்லி வற்புறுத்துகிறார். அதோடு இல்லாமல் பழைய கதையான கணேஷ் பற்றி இழுத்து அமிர்தாவை கண்ணீரில் மூழ்கடிக்கிறார். இதனால் மன வேதனையடைந்த அமிர்தா இன்றைய எபிசோட்டில் எழிலிடம் நடந்ததை கூறுகிறார். அதை கேட்டு கொந்தளித்த எழில் ஈஸ்வரியிடம் சண்டைக்கு செல்கிறார். இந்த நிலையில் நாளைய புரோமோவில், ஈஸ்வரி அமிர்தாவை ராசி இல்லாதவள் என்று சொல்ல எழில் உச்சக்கட்டமாக ஆத்திரமடைகிறார்.
ஆனால் மனமுடைந்த பாக்கியாவோ, எழிலை வீட்டை விட்டு செல் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதனால் அடுத்தடுத்து வரும் எபிசோட்டில் வீட்டில் அனைவரும் பிரிவார்கள் என்று தெரிகிறது. கதை கொஞ்சம் விறுவிறுப்பாகவுள்ளதால் டிஆர்பி எகிறியுள்ளது.