இயக்குனர் பேரி ஜென்சின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள முஃபாசா - தி லயன் கிங் படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், தான் தி லயன் கிங். `டிமோன் அண்ட் பும்பா' கார்ட்டூனில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து உருவான `தி லயன் கிங்' கதை 1994-ம் ஆண்டு அனிமேஷன் படமாகவும், அதன் ரீமேக் 2019-ம் ஆண்டு தத்ரூபமான வடிவமைப்பில் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அனிமேஷன் படமாகவும் வெளியானது. வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தை ஜான் ஃபேவ்ரியு இயக்கினார். 2019-ம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 2 ஆஸ்கர் விருதை இந்தப் படம் வென்றது. இந்தப் படம் உலக அளவில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் இந்த படம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மீண்டும் வருகிறது. இந்த சூழலில் முஃபஸா பாத்திரம் குறித்து விரிவாக பேசுகிறது இந்தப் படம். பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்த கதை மலைகள் மற்றும் நிழல்களுக்கு அப்பால் ஒளியின் மறுபுறத்தில் இருந்து தொடங்குகிறது. நம் வாழ்வை மாற்றி அமைக்கும் சிங்கம் என பின்னணியில் ஒலிக்கும் குரலுடன் ட்ரெய்லர் ஆரம்பமாகிறது. அடுத்த காட்சி காட்டுயிர்கள் ஒன்றாக இருப்பதை போல அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பனி போர்த்திய சூழலும் அறிமுகமாகிறது.
இந்நிலையில் முபாசா தி லயன் கிங் படத்துடைய ட்ரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தில் அதிக விருப்பங்களை பெற்று வருகிறது. ஆதரவற்று வளரும் சிங்கம் முபாசா தனக்கான சாம்ராஜ்யத்தை எப்படி கட்டமைக்கிறது என்பதுதான் இந்த படத்துடைய மைய கதையாகும். ட்ரெய்லர் விறுவிறுப்பாக அமைந்துள்ள நிலையில் யூடியூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து `முஃபாசா: தி லயன் கிங்' படத்திற்கு இந்தியில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.