புதிய நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்யவுள்ள கோபிநாத்... ரசிகர்கள் உற்சாகம்!

Gopinath
Gopinath

பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. வாழ்க்கையின் எதார்த்தை மக்கள் பகிர்ந்து கொள்வது பலரையும் சிந்திக்க செய்கிறது. பல ஆண்டுகளாக நிலைத்து ஓடும் நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தான் கோபிநாத். இவரின் செயல்கள் பலரையும் திரும்பி பார்க்கவைக்கும்.

இதன் மூலம் பிரபலமான இவர், பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களை மோட்டிவேட் செய்வார். மக்களுக்கு ஆர்வம் குறையாத வகையில் பேசும் திறனை கொண்ட இவர் சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேட்டியெடுத்தது வைரலானது. அந்த அளவிற்கு ரசிகர்களின் ஆதரவை கொண்ட இவர் தற்போது புதிய நிகழ்ச்சி ஒன்றை ஹோஸ்ட் செய்யவுள்ளார். அதாவது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 2024ஆம் ஆண்டு ஒளிப்பரப்பாகவுள்ள ஐபிஎல் போட்டியில் புதிய தொகுப்பாளராக கோபிநாத் இணைந்துள்ளார். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸ் விஷ்ணுவுக்கு அடித்த ஜாக்பாட்... சினிமாவில் ஹீரோ வாய்ப்பு!
Gopinath

ஐபிஎல் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதற்கு முன்பு ஆர்.ஜே பாலாஜியின் கமெண்டை கேட்க பலரும் காத்து கொண்டிருப்பார்கள். இந்த முறை இவர் ஹோஸ்ட் செய்வதால் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மார்ச் 22 ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com