பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்மூலம் பிரபலமான மீனா தனது பணி குறித்து பேசியிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகளின் கதையாக அமைந்தது. பலருக்கும் பிடித்த சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்ததால், முதல் சீசனை முடிவுக்குக் கொண்டு வந்து, அடுத்த சீசனின் அறிவிப்பை வெளியிட்டனர். சீசன் 1ல் இருந்த சிலர் சீசன் 2 விலும் நடிக்கிறார்கள். ஆனால், இது அப்பா மகன்களில் கதையாக அமைந்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரும் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக ஓடிக்கொண்டுத்தான் இருக்கின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1ல் மீனா கதாப்பாத்திரம் முதலில் வில்லி மாதிரி கொண்டு வந்தனர். ஆனால், அதுவே போக போக அனைவருக்கும் பிடித்தமான கதாபாத்திரமாக மாறியது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் மீனா ஆரம்பத்திலிருந்தே நல்ல கதாபாத்திரமாக, அனைவருக்கும் பிடித்தமான கதாபாத்திரமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
இரண்டு பாகங்களிலுமே முக்கிய கதாபாத்திரமாக இருந்தவர், மீனா. இவரின் பெயர் ஹேமா. தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நிமிடத்தையும் வீணாக்குவதில்லை என்றும் எப்போதும் கண்டெண்ட் குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமா சீரியல்களில் மட்டுமின்றி, விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல், யூட்யூப் சேனலும் நடத்தி வருகிறார். இப்படி அனைத்திலும் பிஸியாக இருந்து வருகிறார்.
தனது பணி குறித்து பேசும்போது, தன்னுடைய யூட்யூப் சேனலுக்கு கண்டெண்ட் தயாரிப்பதிலும் அவர் தீவிரமாக இருப்பதாகவும், உட்கார்ந்து ஒரு கண்டெண்ட் தயார் செய்து, அதை எப்படி வீடியோவாக மாற்றலாம் என்று யோசித்து குறிப்புகள் எழுதிக் கொள்வாராம். அதன் பிறகு வீட்டிற்கு வந்து உடனே அந்த கண்டெண்ட்டை வீடியோவாக உருவாக்கி அப்லோடு செய்து விடுகிறார்.
யூட்யூப் வருமானம் அவருக்கு அதிகமாகி வருவதால், அவரது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கையில் ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல், எப்போதும் கண்டெண்ட் என்ற யோசனையிலேயே அவர் இருப்பதால் யூடியூப் மூலம் வருமானமும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.