
'I want to eat your pancreas' 2018ல் வெளியான ஜப்பான் அனிமேஷன் படம். இந்த கதையின் ஹீரோ Haruki பயங்கர Introvert. மனிதர்களையே பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பான். ஒரு நாள் அவன் ஹாஸ்பிடல் போயிருக்கும் போது தான் ஹீரோயினுடைய டைரி அவனுக்கு கிடைக்கும்.
ஹீரோயின் பெயர் சக்குரா. அவளும் ஹீரோவுடன் தான் படிக்கிறாள். ஆனால், அவள் Extrovert. எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவள். அவளுக்கு terminal pancreas Illness இருக்கிறது. அவளுடைய கணையம் சரியாக வேலை செய்யாத காரணத்தினால், அவள் சீக்கிரமே இறக்க போகிறாள். இந்த விஷயம் அவளுடைய பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை.
அவளுடைய நண்பர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், வருத்தப்படுவார்கள் என்று அவள் சொல்லவில்லை. ஆனால், ஹீரோ அவளுடைய டைரியை படித்து தெரிந்துக் கொள்கிறான். ஹீரோ இதை பார்த்துவிட்டு பாவப்படுவான் என்று நினைத்த ஹீரோயினுக்கு ஷாக். அவன் மிகவும் நார்மலாக சரி என்று சொல்லிவிட்டு சென்று விடுவான். அது ஹீரோயினுக்கு பிடித்துவிடும்.
அவளுடைய பெற்றோர் அவளை நினைத்து வருத்தப்படுவார்கள், நண்பர்களுக்கு இது தெரிந்தால் வருத்தப்படுவார்கள். ஆனால், ஹீரோ கண்டுக்கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சிறிது சந்தோஷத்தை தருகிறது. இருவரும் நண்பர்களாக பேசத் தொடங்குகிறார்கள். விரைவில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறுகிறார்கள்.
ஒரு சமயத்தில் ஹீரோயினுக்கு தான் இறந்து போய்விடுவோம் என்று தோன்றுகிறது. ஹீரோவிற்கு இவள் நம்மை விட்டு சென்று விட்டால், என்ன செய்வது? என்று தோன்றுகிறது. சக்குராவிடம் ஹீரோ சென்று, 'உன்னை நினைத்து நான் கவலைப்படுகிறேன்' என்று சொல்கிறான். யாரையும் நினைத்து இதுவரை வருத்தப்படாத ஹீரோவிற்கு தன்னுடைய மாற்றம் ஆச்சர்யமாக உள்ளது.
இப்படி போய்க் கொண்டிருக்க விதி அதனுடைய வேலையை காட்டுகிறது. திடீரென்று ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ஹாஸ்பிடலில் இரண்டு வாரம் இருக்கிறாள். ஒருநாள் டிஸ்சார்ஜ் ஆகும் சமயம் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்று பேசி வைத்திருப்பார்கள். ஹீரோயினுக்காக ஹீரோ காத்திருக்கும் சமயம் அவள் கொலை செய்யப்படுகிறாள்.
நமக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும் ஹீரோயின் இறந்து விடுவாள் என்று. ஆனால், எந்த சமயம், எப்படி இறப்பாள் என்பதை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டோம். இருவருமே ஒருவரை ஒருவர் காதலித்திருப்பார்கள். ஆனால், சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இந்த அனிமேஷன் பார்ப்பதற்கு ஒரு அழகான காதல் கதையாக இருக்கும். இந்த அனிமேஷன் திரைப்படத்தை Amazon prime, Apple tv, Netflix போன்ற OTT தளங்களில் கண்டு ரசிக்கலாம்.