
'டெக்கே டெக்கே' என்பது ஜப்பானில் இருக்கும் பல Urban legend கதைகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பள்ளி மாணவியின் கதை தான் இது. இந்த மாணவி மிகவும் அமைதியான Introverted ஆன பெண். யாரிடமும் எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பாள். அதனால் மற்ற மாணவர்கள் இவளை Bully பண்ண ஆரம்பிக்கிறார்கள்.
ஒருநாள் அந்த பெண் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது இந்த Bully செய்யும் மாணவர்கள் அவளை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விடுகிறார்கள். அந்த பெண் ரயில் தண்டவாளத்தில் விழுந்து அழுதுக் கொண்டிருக்கும் போதே ஒரு ரயில் அவள் மீது ஏறி அவளுடைய கீழ் உடல் நசுங்கி விடுகிறது. அந்த பெண் பயங்கர வலியுடன் கத்திக் கொண்டே இறந்து போகிறாள். அங்கே கேமரா இல்லாததால், இது ஒரு விபத்து என்று கூறி கேஸை மூடி விடுகிறார்கள்.
ஆனால், அந்த பெண்ணுடைய ஆத்மா சாந்தியடையவில்லை. அவளுடைய அகால மரணத்தால், கோபமடைந்த பழிவாங்கும் ஆவியாக மாறுகிறாள். ஒரு பேயாக மாறி வருகிறாள். அவளுக்கு இடுப்பிற்கு கீழ் உடல் இல்லை. இந்த டேக்கே டேக்கே இரவில் தனியாக நடந்துப் போகிறவர்கள், தண்டவாளத்தில் நடந்து செல்பவர்களை பாரத்தால், அதனுடைய கையாலேயே வேகமாக நடந்து வந்து அவர்களிடம், 'என்னுடைய காலை பார்த்தீர்களா?' என்று கேட்குமாம். 'இல்லை' என்று சொன்னால் அது கையில் இருக்கும் ஆயுதத்தை வைத்து அவர்களின் உடலையும் பாதியாக வெட்டி அவர்களையும் அவளை போலவே மாற்றிவிடும்.
இந்த கதையை கேட்டு பயந்து நிறைய பேர் ரயில் தண்டவாளத்தின் பக்கத்தில் போவதற்கெல்லாம் பயந்திருக்கிறார்கள். இந்த Urban legend கதைகள் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கதையாக இருக்க வேண்டும்.
ரயில் தண்டவாளம் பக்கத்தில் போகக்கூடாது; டேக்கே டேக்கே வந்துவிடும்; இரவு வெளியே போகக்கூடாது குச்சிசாகி வந்துவிடும் என்று குழந்தைகளை ஆபத்தான இடங்களுக்கு போகவிடாமல் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.
நம் ஊர்களிலும் இதுப்போன்ற கதைகள் உண்டு. கிணறு பக்கம் போகக்கூடாது, பாழடைந்த வீட்டிற்கு போகக்கூடாது என்பது போன்ற கதைகள் சொல்லப்படுவது குழந்தைகளை ஆபத்தான இடத்திற்கு போகாமல் தடுப்பதற்காக இருக்கலாம்.