இலக்கியா சீரியலின் புது இலக்கியா இவரா?

இலக்கியா
இலக்கியா
Updated on

சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் இருந்து கதாநாயகி வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் யார் வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் தனித்துவமான கதையம்சத்துடன்... இல்லத்தரசிகள் மனதை அதிகம் கவர்ந்து விடுகிறது. அந்த வகையில், திங்கள் முதல் சனி வரை மாலை 2 மணிக்கு ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான தொடர் இலக்கியா.2022-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியலை, சாய் மருது என்பவர் முதலில் இயக்கி வந்த நிலையில், அவர் விலகிய பின்னர் ஸ்டாலின் இனியன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த சீரியலில் நடிகை ஹீமா பிந்து கதாநாயகியாக நடிக்க, சித்தி தொடரில் நடித்து பிரபலமான நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில், ரூபா ஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஸ் குமார், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 350 எபிசோடுகளை கடந்து, ரசிகர்களின் நல்ல வரவேற்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இருந்து, கதாநாயகியாக நடித்து வரும் ஹீமா பிந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீமா பிந்துவின் இந்த முடிவுக்கு காரணம், TRP ரேட்டிங் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹீமா பிந்துவுக்கு பதில் இலக்கியாவாக தொடரில் நடிக்கப்போவது நடிகை சம்பவிதானாம். தற்போது இந்த தகவல் வெளியாக நல்ல நடிகை தேர்வு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com