விஜய் சேதுபதிக்கு கண்ணு தெரியலையா? – கொந்தளித்த நடிகை!

BB 8
BB 8 update
Published on

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்து பேசினார். அந்தவகையில் இவரின் பேச்சு குறித்து நடிகை சனம் ஷெட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இதுவரை ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா, வர்ஷினி மற்றும் சிவகுமார் ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.

சென்ற வாரம் முழுவதும் பொம்மை சண்டை, கையெடுத்து கும்பிட்ட சண்டை என வீடு பரபரப்பாகவே இருந்தது. தீபக் கேப்டனாக செயல்பட்டார். இதனையடுத்து வார இறுதியில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை மீட் செய்தார். எப்போதும்போல் சிலரை நன்றாக வச்சு செய்துவிட்டார். சாச்சனாவையும் கேள்விகள் கேட்டு திக்குமுக்காடச் செய்தார். பின் அந்த வாரத்தில் நடந்த சண்டைகளெல்லாம் விவாதிக்கப்பட்டன.

அந்தவகையில் சென்ற வாரம் ஏற்பட்ட மஞ்சரி மற்றும் அருண் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அதில் மஞ்சரி செய்தது தவறு என்று விஜய் சேதுபதி கடுமையாக பேசி மன்னிப்பு கேட்க வைத்தார். இது ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில் ட்ரிகரிங் போன்ற வார்த்தைகளை முதலில் அருண்தான் பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் அந்த  வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சினிமாவில் சுந்தர் சி செய்த முதல் வேலையே இதுதான்!
BB 8

இதுகுறித்து சனம் ஷெட்டியும் பேசியுள்ளார். அதாவது, “நேற்றைய எபிசோட் ரசிகர்களை முழுமையாக ஏமாற்றியது. பாதிக்கப்பட்ட மஞ்சரியை இரக்கம் இன்றி அவமானப்படுத்துவது மற்றும் கொடுமைப்படுத்துபவர்களை எப்படி பாராட்டுவது? விஜய் சேதுபதி செய்தது தவறு. அருணை பாராட்டுவதற்காக மஞ்சரியை நோஸ்கட் பண்ணினார். கருப்பு கண்ணாடிப் போட்டதால் விஜய் சேதுபதிக்கு கண்கள் தெரியவில்லை போல. முன்னாடி அவ்ளோ பெரிய அநியாயம் நடக்கிறது, மஞ்சரியை மொத்த ஹவுஸ்மேட்டும் சேர்ந்து புல்லிங் பண்றாங்க, கார்னிங் பண்றாங்க ரவுடிசம் பண்றாங்க.

இதைத் தட்டிக் கேட்க மனசு வரலையா சார்?” என்று அடுக்கடுக்காக காரசாரமான கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com