ரசிகர்களுக்கு இந்த வாரம் டபுள் டமாக்கா... ஜப்பான், ஜிகர்தண்டா ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Jigarthanda double x & Japan
Jigarthanda double x & Japan

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ஜப்பான், ஜிகர்தண்டா படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் 25 படமான ஜப்பானை ராஜு முருகன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, விஜய் மில்டன், ஆஷ்னா சுதீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல்வேறு படங்கள் எடுத்து வருகிறார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படம் தீபாவளியன்று வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது.

இதையும் படியுங்கள்:
படமாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை... இவரா ஹீரோயின்?
Jigarthanda double x & Japan

இந்த 2 படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்கள் எப்போது ஒடிடி ரிலீஸ் என கேட்டு கொண்டிருந்தனர். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், போட்டிக்கு பயந்து 3 நாட்கள் கழித்து டிசம்பர் 11 ஆம் தேதி ஜப்பான் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com