

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள ஒரு சில திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம். இந்த திரைப்படங்கள் ஆன்மீகம் , காதல் , திரில்லர், அதிரடி ஆக்சன் என்று பலதரப்பட்ட ரசிகர்களை கவரும் வகையில் இருக்கின்றது.
1.கருப்பு : தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , ஹிந்தி
திரைக்கதை: நீதிமன்றங்களின் நடைபெறும் ஊழல்களை பற்றியும் , அதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக வரும் கடவுளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ள கதை. ஊருக்கு புதியதாக வரும் வழக்கறிஞர் சரவணன்(சூர்யா) உள்ளுக்குள் காவல் தெய்வம் கருப்பாக இருக்கிறார்.அதே ஊரில் உள்ள வழக்கறிஞர் பேபி கண்ணன் (RJ.பாலாஜி) மிகவும் மோசமான வழக்கறிஞராகவும், தீயவர்களுக்கு துணை புரியும் ஆளாகவும் இருக்கிறார். ஆனால் , கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றத்தில் நீதியை சரவணன் நிலை நாட்டுகிறார்.
காவல் தெய்வம் கருப்புவின் எல்லைக்குள் அந்த நீதிமன்றம் இருப்பதால் தான் , தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பேபி கண்ணன் சூழ்ச்சியின் மூலம் நீதிமன்றத்தை இடித்து விடுகிறார். இதனால், கருப்புவின் எல்லையை தாண்டி வேறு பகுதியில் புதிய நீதிமன்றம் அமைகிறது. இனி வழக்கம் போல தனது மோசடி வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று பேபி கண்ணன் நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் திரைக்கதை.
நடிகர்கள் : சூர்யா , திரிஷா , ஸ்வாசிகா , சிவதா , நட்டி , மன்சூர் அலிகான், RJ.பாலாஜி, ஜார்ஜ் மரியான் , இந்திரன்ஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இயக்கம் : RJ.பாலாஜி
வெளியீடு: ஜூன் 12 முதல் Prime Video தளத்தில் பார்க்கலாம் .
2. ரமணி கல்யாணம் – தெலுங்கு , தமிழ்
திரைக்கதை: ஒரு விபத்தில் தனது கால்களை இழந்த ராஜ் (சூர்யா) , தன்னம்பிக்கை மிகுந்த கண் பார்வை இல்லாத சஞ்சனாவை (தீப்ஷிகா) சந்திக்கிறான். ஆர்.ஜேவாக வேலை பார்க்கும் சஞ்சனாவை பார்த்து ராஜிற்கு தன்னம்பிக்கை வருகிறது. இருவரும் மெல்ல மெல்ல தங்களது காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த காதலுக்கு அனைவரும் சம்மதம் தெரிவித்த நிலையில் ஏதேச்சையாக நடைபெறும் ஒரு சம்பவம் திரைக்கதையினை மாற்றுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது தான் ரமணி கல்யாணம்.
நடிகர்கள்: சூர்யா வசிஷ்டா , தீப்ஷிகா சந்திரன் , சீனிவாச ரெட்டி , சியாமளா, பிரதீபா ஆகியோர் நடித்துள்ளார்
இயக்கம் : விஜய் ஆதிரெட்டி
வெளியீடு : ஜூன் 12 முதல் SUN NXT தளத்தில் பார்க்கலாம்.
3. டிரிடம்: மலையாளம் , தமிழ்
திரைக்கதை : அழகான மலைகள் சூழ்ந்த கிராமத்திற்கு சப் இன்ஸ்பெக்டராக விஜய் ராதாகிருஷ்ணன்(ஷேன் நிகம்) வருகிறார். தொடக்கத்தில் அமைதியான கிராமமாக இருக்கும் அந்த ஊர், போகப்போக பல மர்மங்கள் நிறைந்த கொலைகள் நடந்த பூமியாக இருக்கிறது. அந்த ஊரில் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்களின் குற்றவாளிகளை சப் இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்தாரா? அந்த ஊரில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டினாரா? என்பதுதான் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த இந்த திரைப்படத்தில் அம்சம். கேரளாவில் பெரிய வரவேற்பு பெற்ற அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டையும் பெற்றது.
நடிகர்கள் : ஷேன் நிகம் , மாத்தியூ வர்க்கிஸ், தினேஷ் பிரபாகர் , நந்தன் உன்னி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்கம் : மார்ட்டின் ஜோசப்
வெளியீடு : ஜூன் 12 ஆம் தேதி முதல் JIO HOTSTAR தளத்தில் கண்டு ரசிக்கலாம்.