

1.கார்மேனி செல்வம் : தமிழ்
திரைக்கதை: சம்பத்(கவுதம்) என்கிற தொழிலதிபர் வீட்டில் கார் டிரைவராக செல்வம் (சமுத்திரக்கனி) வேலை பார்த்து வருகிறார். செல்வத்தின் மனைவி சாந்தி சாலையோர இட்லி கடை ஒன்றை நடத்துகிறார். இருவருக்கும் விரைவிலேயே பணக்காரர்கள் ஆகவேண்டும் என்ற ஆசை வந்து அவர்களின் நேர்மையை தொலைத்து விடுகிறார்கள்.
சம்பத் வெளிநாடு சென்ற நேரத்தில் ,தன் முதலாளியின் காரை வாடகை காராக சமுத்திரக்கனி பயன்படுத்த தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் செல்வம் தன் ஆடம்பர வாழ்க்கை ஆசையில் நிறைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் அவர் மீண்டாரா? என்பதை ஓடிடியில் கண்டுகளியுங்கள்.
நடிகர்கள் : சமுத்திரக்கனி , கவுதம் மேனன் , அபிநயா , லட்சுமிப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இயக்கம் : ராம் சக்ரி
வெளியீடு: ஜூன் 3 முதல் Prime Video தளத்தில் பார்க்கலாம் .
2. 29 – தமிழ்
திரைக்கதை: எந்த ஒரு எதிர்பார்ப்பும், எவ்விதமான பொறுப்பும் இல்லாமல் கிடைக்கும் வேலையை செய்து ஊரை சுற்றும் 29 வயது சத்யாவை(விது) பற்றிய திரைக்கதை. பொறுப்பில்லாத சத்யாவிற்கு ஐஏஎஸ் கனவுகளுடன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி நகரும் விஜிக்கும் (பிரீத்தி) இடையில் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்து விடுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது தான் திரைக்கதை
நடிகர்கள்: பிரீத்தி அஸ்ராணி, விது, மாஸ்டர் மகேந்திரன் , ஷெனாஸ் பாத்திமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இயக்கம் : ரத்ன குமார்
வெளியீடு : ஜூன் 5 முதல் Netflix தளத்தில் பார்க்கலாம்.
3. பேட்ரியாட் : மலையாளம் , தமிழ்
திரைக்கதை : மலையாள சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்துள்ள மல்டி ஸ்டார் திரைப்படம் இது. இராணுவத்திற்காக பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் எவ்வாறு ராணுவ அமைச்சர்(ரேவதி) மற்றும் ராணுவ அதிகாரி(மம்மூட்டி) ஆகியோருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பது தான் திரைப்படத்தின் மூல கதை.
நடிகர்கள் : மம்மூட்டி , மோகன்லால், நயன்தாரா , பகத் பாசில் , குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன், ரேவதி, ஷிவ்தா
உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்கம் : மகேஷ் நாராயணன்
வெளியீடு : ஜூன் 5ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் கண்டு ரசிக்கலாம்.
4.துரந்தர் – தி ரிவெஞ்ச் : ஹிந்தி
திரைக்கதை : மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற துரந்தர் திரைப்படத்தின் தொடர்ச்சி இது. ஜஸ்கிரத் சிங் ரங்கி(ரன்வீர் சிங்) எவ்வாறு தன் நாட்டிற்காக எதையும் செய்ய துணியும் உளவு அதிகாரியாக மாறினான் என்பதே திரைக்கதை. தன் நாட்டை காப்பாற்றுவதற்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகளை வேரறுக்கும் சுவாரசியமான திரைக்கதையை கொண்டது.
நடிகர்கள் : ரன்வீர் சிங் , சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால் , R.மாதவன் , சாரா அர்ஜூன் , ராகேஷ் பேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் : ஆதித்யா தர்
வெளியீடு : ஜூன் 5 ஆம் தேதி முதல் Jio Hotstar தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.