100 நாட்கள் கடந்த முத்தழகு; கேக் வெட்டி கொண்டாட்டம்!

100 நாட்கள் கடந்த முத்தழகு; கேக் வெட்டி கொண்டாட்டம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

விஜய் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல் 100 நாட்கள் கடந்ததையொட்டி, ஆந்த சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த முத்தழகு சீரியல் கதையின் நாயகன் பூமி நாதனாக, ஆஷிஷ் சக்கரவர்த்தியும், நாயகி முத்தழகாக ஷோபனாவும் நடிக்கிறார்கள்.

கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் தைரியமான கிராமத்துப் பெண் ஹீரோயின் மற்றும் பணக்கார ஹீரோ என்ற கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கதை சுவாரஸ்யமாக்ச் செல்வதால், மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பானாலும் பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்றுவிட்டாள் முத்தழகு..

பால்கான் டெலிவிஷன் மீடியா (Falcon Television Media)தயாரிக்கும் இந்த முத்தழகு சீரியல் 100-வது நாளை கடந்ததையொட்டி,  இன்று செட்டில் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com