கவின் ரசிகர்களுக்கு குட்நியூஸ்!

Star Movie
Star Movie

திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்ற கவினின் ஸ்டார் படம் சத்தமின்றி இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் நடித்து மிகவும் பிரபலமானார். ஆனாலும் அவருக்கு அந்தளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற கவின் பட்டி தொட்டி எல்லாம் பேமஸானார். பணப்பெட்டியுடன் வெளியே வந்த கவினின் வாழ்க்கை அப்படியே புரட்டி போட்ட மாதிரியானது.

என்னதான் நிகழ்ச்சியில் கெட்ட பெயர் எடுத்திருந்தாலும், வெளியே வந்த கவினை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர், தொடர்ந்து டாடா படத்தில் நடித்து ஹிட்டடித்தார். இந்த படம் இவரின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படம் ரீச் ஆனது. அப்பா மகனுக்குள்ள உறவை அழகாக எடுத்து காண்பித்த இந்த படம் பலரையும் சென்றடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. அப்படி இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் ப்ளட்டி பெக்கர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கெட்டப் மற்றும் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஸ்டார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவினின் அதிரடியான நடிப்பில் வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கோடி கணக்கில் வசூல் சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்:
ஈஸ்வரிக்கு என்னாச்சு? அனல் பறக்கும் புரோமோ... பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?
Star Movie

சமீபத்தில் எந்த படமும் ஓடாததால் தியேட்டர் உரிமையாளர்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தை கையிலெடுத்துள்ளனர். ஆனால் தற்போது இந்த மாதம் வெளியாகி வரும் படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அப்படி தான் ஸ்டார் படமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரண்மனை 4ம், ஸ்டாரும் வசூலில் போட்டி போட்டு வருகிறது.

அம்மாவிற்காக இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட, தன் சினிமா கனவை துரத்தி பிடிக்க அவ்வப்போது பட ஆடிஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வி வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் அவனுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு முகத்தில் காயம் ஏற்படுகிறது. இறுதியில் கவின் சினிமா கனவு என்ன ஆனது... அதில் ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் ஸ்டார் படத்தின் கதை.

இந்த நிலையில், இந்த படத்தின் சத்தமின்றி இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இது கவின் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டரை போல் ஓடிடியிலும் ஸ்டார் படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com