Kayal serial update: கடத்தப்பட்ட கயல்… மணப்பெண்ணாக தீபிகா… திக் திக் நொடிகள்!

Kayal serial
Kayal serial
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இந்த வாரம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நகரவுள்ளது.

கயல் சீரியலில் இந்த வாரம் கயல் எழில் திருமணம் பற்றிய கதைக்களம்தான் நகரவுள்ளது. எழில் தனது காதலியான கயலை திருமணம் செய்ய தயாராகிவிட்டார். ஆனால், எழிலின் அம்மா சிவசங்கரிக்கு தனது மருமகளாக கயல் வருவது பிடிக்கவில்லை. தீபிகாவே எழிலுக்கு ஏற்ற ஜோடி என்று நினைக்கிறார். ஆகையால், எழிலை எப்படியாவது தீபிகாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பல சூழ்ச்சி வேலைகளில் ஈடுபடுகிறார். அந்தவகையில் தீபிகாவை திருமணத்திற்கு அழைத்து வந்துவிட்டார்.

அதேபோல், சிவசங்கரி எழிலை தீபிகா கழுத்தில் தாலி கட்ட வைத்துவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார். ஆனால், தீபிகா செய்த குளறுபடியால், சிவசங்கரியும் தீபிகாவும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தி, சிவசங்கரி தீபிகாவை வீட்டை விட்டு வெளியேற செய்துவிட்டார்.

இந்த சொதப்பலால், சிவசங்கரி கயலை கடத்தும் ப்ளானில் ஈடுபடுகிறார். தீபிகாவின் அப்பா ஆட்களை வைத்து கயலை கடத்திவிடுகிறார். அந்த நேரத்தில் தீபிகாவுக்கு முக்காடு போட்டு மணமேடையில் அமர்த்திவிட வேண்டும் என்றும், எழிலை தாலி கட்ட வைத்து விட வேண்டும் என்றும் ப்ளான் செய்கிறார்கள்.

ஆனால், மணமேடைக்கு தீபிகா வந்தவுடன் எழிலுக்கு அது தீபிகா என்று தெரிந்துவிடுகிறது. அதேபோல் கயல் ஒரு சூழ்ச்சியில் சிக்கியிருக்கிறார் என்றும், தனது அம்மா சிவசங்கரியின்  உண்மை முகமும் தெரிந்துவிடுகிறது. இதனையடுத்து அவர் கல்யாணத்தை நிறுத்திவிட்டு கயலை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவார். கயலை எப்படி காப்பாற்றி அவர் கழுத்தில் தாலி கட்டுவார் என்பதே இந்த வாரத்தில் ஒளிபரப்பாகும் என்பது ப்ரோமோ மூலம் தெரியவருகிறது.

இதையும் படியுங்கள்:
சின்னக் கவுண்டர் - இயக்குனர் ஆர். வி. உதயகுமாரின் பெஸ்ட்!
Kayal serial

சிவசங்கரி தனது மகனின் ஆசையையும் கல்யாணத்தையும் நிறைவேற்றாமல் பணத்திமிரை காட்டும் விதமாக கயலை நோகடித்து வருகிறார். ஆனால் அம்மாவின் குணம் தெரிந்த எழில், சிவசங்கரியை வெறுக்கும் பட்சத்தில் கயல் உள்ளே புகுந்து நாட்டாமை பண்ணி சிவசங்கரியுடன் எழிலை சமரசம் செய்து விடுவார். அதன் பிறகு தான் கயலின் குணத்தை புரிந்து கொண்டு சிவசங்கரி நல்ல மாமியாராக நடந்து கொள்வார் என்பது போல கதை அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com