சிறகடிக்க ஆசை சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பழம்பெரும் நடிகைகள்!

Siragadikka Aasai
Siragadikka Aasai

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தை எட்டியுள்ளது.

தற்போது சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்பார்க்காத திருப்பங்களுடனும், விறுவிறுப்பாகவும்... பரபரப்பான காட்சிகளுடனும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், அண்ணாமலை தன்னுடைய அம்மாவின் 80-ஆவது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி உள்ளார். எண்பதாவது பிறந்த நாளில் தனக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து யார் பரிசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நான் ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுக்கப் போகிறேன் என்று நாச்சியார் பாட்டியும் சொல்லி இருக்கிறார். இதனால் வீட்டில் எல்லோரும் என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள். மனோஜ் மற்றும் ரோகினி சின்ன வயசில் பாட்டியின் நவரத்தின மாலை தொலைந்து போய்விட்டதால் பாட்டி ரொம்ப பீல் பண்ணாங்க அதனால இப்ப ஒரு நவரத்தின மாலை வாங்கி கொடுத்துடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். விஜயா தன்னுடைய பிரண்ட் பார்வதியின் வீட்டில் இருக்கும் டிவியை கொண்டு வந்து அதை கிப்டாக கொடுத்து விடலாம் என்று பிளான் போட்டு இருக்கிறார்.

அதுபோல ஸ்ருதியும் தன் பங்குக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுக்க வேண்டும் இருக்கிறார். இந்த நிலையில் முத்து மற்றும் மீனா என்ன கிப்ட் கொடுக்கப் போகிறார்கள் என்று கேள்வி இருக்கிறது. ஏற்கனவே மீனாவின் நகைகளை கொடுத்து பாட்டிக்கு இரட்டை வட சங்கிலி தங்கத்தில் வாங்கி கொடுத்து விடலாம் என்று நினைத்திருந்து நிலையில் மீனாவின் நகைகள் கவரிங் நகையாக மாறி இருப்பதை தெரிந்து முத்து கோபத்தில் இருக்கிறார். இதனால் முத்து வீட்டை விட்டு வெளியேவும் போகிறார்.

ஆனால் வெளியே போன முத்து குடித்துவிட்டு வரப்போகிறாரா? அல்லது ஏதேனும் ஸ்பெஷல் கிப்ட் கொண்டுட்டு வரப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பில் குடும்பத்தினர் இருக்கிறார்கள். அதுபோல ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் ஸ்ரீ தேவா வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ரத்த வெள்ளத்தில் மிதந்த சினேகா... 'ஏப்ரல் மாதத்தில்' ஷூட்டிங் போது நடந்த விபத்து'.. மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
Siragadikka Aasai

அதில் நடிகை கே.ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ரீ தேவா, "என் பள்ளி பருவத்தில் பலமுறை என் அம்மாவுடன் சேர்ந்து நல்ல நேரம் (எம்ஜிஆர்) திரைப்படம் மற்றும் ஜீபூம்பா, பட்டணத்தில் பூதம் பலமுறை பார்த்திருக்கிறேன். அந்த திரைப்படத்தில் கதாநாயகி அம்மா மூத்த நடிகை கே.ஆர் விஜயா அவர்கள் நம் சிறகடிக்க ஆசை படப்பிடிப்பு தளத்தில் இன்று நான் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் வருகை தந்தார். அவர்களை நேரில் சந்தித்த நிமிடம் என் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய பாதம் தொட்டு வணங்கி, வாழ்வில் மேன்மேலும் உயர்நிலை அடையவேண்டும் என அவரின் இனிப்பான வாழ்த்துக்களை பரிசாக பெற்றுக் கொண்டேன்" என்று பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதை பார்த்ததும் ரசிகர்கள் இது முத்து மற்றும் மீனா கொடுக்கும் கிஃப்ட்டா என்று கேட்க, அதற்கு ஸ்ரீ தேவா, அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை" என்று பதில் கொடுத்திருக்கிறார். இதனால் இது முத்து மற்றும் மீனா கொடுத்த கிப்ட் இல்லை என்று தெரிகிறது. ஆனால் நாச்சியார் பாட்டியின் பிறந்தநாளுக்கு சிறப்பு விருந்தினராக வடிவுகரசி மற்றும் கே ஆர் விஜயா வர இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனாலும் என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com