ரத்த வெள்ளத்தில் மிதந்த சினேகா... 'ஏப்ரல் மாதத்தில்' ஷூட்டிங் போது நடந்த விபத்து'.. மனம் திறந்த ஸ்ரீகாந்த்!

Srikanth
Srikanth

நடிகர் ஸ்ரீகாந்த், பல வருடங்களுக்கு முன்பு தனக்கும் சினேகாவுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை சினேகா. பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. தற்போது நடிகை சினேகாவுக்கு 42 வயதாகும் நிலையில்... தொடர்ந்து சினிமாவில் தரமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக தளபதி விஜய்யை வைத்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில், அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சினேகாவுக்கும், தனக்கும் நடந்த விபத்து குறித்து பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நானும் சினேகாவும் சேர்ந்து நடித்து இருந்தோம். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எனக்கும் சினேகாவுக்கும் விபத்து ஏற்பட்டது. இரண்டு பேருமே வெவ்வேறு ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்து இருந்தோம். சினேகாவிற்கு நடந்த சிகிச்சை நினைக்கும் போது இப்போதும் எனக்கு உடம்பு சிலிர்க்கிறது. கார் விபத்தால் சினேகா ரத்த வெள்ளத்தில் இருந்தார். அவருடைய முதுகெலும்பு உடைந்து போயிருக்கும் நிலையில் இருந்தார். கார் கதவுகள் திறக்க முடியாமல் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து போனது.

இதையும் படியுங்கள்:
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு விரைவில் டும்டும்டும்!
Srikanth

அந்த சம்பவத்தை என்னால் இப்போது கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு மோசமான நிலையில் சினேகா இருந்தார். அந்த சமயத்தில் தான் எனக்கும் விபத்து அந்த இருவருமே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பிறகுதான் ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்து முடித்தோம் என்று கூறி இருந்தார்.

இரண்டு பேஷண்டை வைத்து அந்த இயக்குனர் அந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். பாதிக்கு மேலே எல்லாம் நாங்கள் இரண்டு பேரும் நடந்து வருவது போன்றே காட்சிகள் இருக்காது. எங்கள் இருவருடைய உடல் நிலையை கருதி இயக்குனர் காட்சிகளை மாற்றி வைத்துவிட்டார். அதுபோல பாதிக்கு மேலே நாங்கள் இரண்டு பேரின் முகம் கொஞ்சம் வீங்கி விட்டோம். அது ஹாஸ்பிடலில் இருந்து வந்த எஃபெக்ட் தான் என்று பழைய நினைவுகளை ஸ்ரீகாந்த் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

சினேகா-ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், போஸ் போன்ற படங்களில் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆகும். இப்படி பட்ட படத்தில் இந்த ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது யாருக்கும் தெரியாது. தற்போது ஸ்ரீகாந்த் மனம் திறந்துள்ளதால் இந்த படத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com