விஜய் தொலைக்காட்சி தொடரில் தினசரி இரவு எட்டுமுப்பதுக்கு 'அய்யனாா் துணை' என்ற நாடகம் ஒளிபரப்பாகிறது. லாாி டிரைவர் குடும்பத்தலைவர். அவருக்கு மூன்றுபிள்ளைகள்.
அம்மா இல்லை சிறிய வயதிலேயே யாா் அரவணைப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாா்கள். ஒரு பெண் குடும்பத்தை வழி நடத்த இயலாத நிலையில் தகப்பனாரும் சரிவர கவனிக்காத நிலையில் அந்த குடும்பம் எப்படி முன்னேற முடியாமல் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் வாழ்கிறாா்கள் என்பதை கதைக்களம் விவரிக்கிறது அதே நேரம் தகப்பனாா் ஒரு பெண்ணுக்கு உதவப்போய் அந்த பெண் கைக்குழந்தையை விட்டு விட்டு ஒருவருடன் போவது போலவும் கதை நகர்கிறது அந்த பையனையும் தகப்பனாா் வளா்க்கிறாா்.
சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் என கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்தாலும் கேரக்டர் மனதில் நிற்கவில்லை.
திருமணம் ஆகாத மூத்த சகோதரன் சமையல் செய்து போடுவதும் கொத்தனாா் வேலை பாா்ப்பது போலவும் அங்கு வேலைக்கு வந்த வெளிமாநில பெண் அவரது சகோதரன் மூலமாக தங்கையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அது தடைபடுவது போலவும் பின்னர் அவர்கள் பெண்ணின்சொந்த ஊா் போய் பெண்கேட்பதுபோலவும் பெண்ணின்வீட்டாா் நிறைய நகை பணம் நகை கேட்பது போலவும் அதை தருவதாக ஒப்புக்கொள்வதும்யாரிடமும் வசதியோ பணமோகிடையாது , லாஜிக் உதைக்கிறது ,
அதே போல சோழன் நிலாஜோடி நிலாவின் குடும்பத்தாா் ஏற்பாடு செய்த திருமணம் வேண்டாம் என டிரைவர் சோழனுடன் கிளம்பி வருவது போலவும் இருவரும் முரண்பாடாகவே பிாிந்து வாழ்ந்து வருவது போலவும் பின்னர் சந்தர்ப்ப வசத்தால் பிாிவதும் லாஜிக் அபத்தமாக இடிக்கிறது.
மேலும் அடுத்த சகோதரன் டூ வீலர் மெக்கானிக்கைஒரு பெண் தீவிரமாக காதலிக்கிறாா். கல்லூாியில் படிக்கும் அந்த பெண் பெற்றோா் பேச்சு கேளாமல் மெக்கானிக்கை வளைத்து வளைத்து காதலிப்பதும், கல்லூாிக்கே போகாமல் ஊா் சுற்றுவதும் பின்னா் சண்டை போட்டு பிாிந்து வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதும் தலையை சுற்றும் விதமாய் கதைக்களம் மிகவும் அலுப்பு தட்டுகிறது. ஆனால் சகோதரர்கள் அனைவரும் பொய் ஒன்றையே தொடர்ந்து சொல்லிவருவதே கதைக்களமாக உள்ளது.
கதையில் எந்த இடத்திலும் வலு இல்லை... ஒரே சொதப்பல் தான் போங்க.
13.5.2026-ல் அந்த பெண்ணின் சொற்படி வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடுகிறாா்கள். திருமண தேதியையும் குறிக்கும் போது 15.6.2026-ல் ஆனி 1ம் நாள் திருமண தேதி வைக்கிறாா்கள் அன்று அமாவாசை வருகிறது. அதுகூடவா தெரியவில்லை. பொதுவாக காலேஜ் படிக்கும் பெண்கள் எப்படி எல்லாம் பழகக்கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என நம்மை நாமே தேற்றிக்கொள்ளத்தான் வேண்டும் .