

ஒரு கால கட்டத்தில் தமிழ்ப் படங்களுக்கு தமிழில் டைட்டில் வைத்தால் அரசு மானியம் வழங்கப்படும் என்ற சலுகை இருந்ததால் தூய தமிழில் டைட்டில் வைத்தார்கள்.இப்போ ஓடிடி நிறுவனஙகள் ஆங்கில டைட்டில் வைத்தால் எல்லா மொழிகளிலும் ரீச் ஆக ஈசி என ஆங்கிலத்தில் டைட்டில் வேண்டுகிறார்கள்.அதனால் பெரும்பாலான தமிழ்ப்படங்களுக்கு ஆங்கில டைட்டில் தான்.அந்த வரிசையில் இந்தத் திரைப்படமும் இணைந்துள்ளது.
கதைக்களம் (ஸ்பாய்லர் அலர்ட்):
நாயகனின் அக்காவுக்கு, 'தாரே ஜமீன் பர்' இந்திப் படத்தில் வருவது போன்ற ஆட்டிசக் குறைபாடுடைய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்தச் சிறுமிக்கு எதிர்பாராத விதமாக நாயகன் மூலம் ஒரு நாய்க்குட்டியின் நட்பு கிடைக்கிறது.
அந்த நாய்க்குட்டி வந்த பிறகு, சிறுமியின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், திடீரென அந்த நாய்க்குட்டி காணாமல் போகிறது. அது கவுன்சிலர், எம்.எல்.ஏ, முதல்வர் என மூன்று நபர்களிடம் கைமாறுகிறது. ஒருபுறம் நாய்க்குட்டியின் அம்மா (தாய் நாய்) தன் வாரிசைத் தேடுகிறது; இன்னொரு புறம் நாயகன் தேடுகிறார். வில்லன்களும் அந்த நாய்க்குட்டியைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஆக ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார்.வழக்கமாக ரவுடி ,ஏழை மாதிரி கேரக்டரிலேயே அவரை பார்த்து சலித்த நமக்கு இது பரவாயில்லை என தோன்றுகிறது.நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. ஆனாலும் கண்களுக்குக்குளிர்ச்சியாய் இருக்கட்டும் என படம் முழுக்க ஆங்காங்கே உலவ விட்டிருக்கிறார்கள்.
தேவதர்சினி & சுப்பு பஞ்சு: நாயகனின் அக்கா மற்றும் அத்தானாக நடித்திருக்கும் இவர்களின் நடிப்பு கச்சிதம். குறிப்பாகச் சுப்பு பஞ்சு காமெடியில் கவனம் ஈர்க்கிறார்.இளங்கோ குமாரவேல், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், நமோ நாராயணா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். கெஸ்ட் ரோலில் சரத்குமார் வருகிறார்.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் உதயபானு மகேஷ் வரன். கவிதாலயா பிலிம்ஸ் புஷ்பா கந்தசாமி இந்த படத்தைத் தயாரித்து இருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சராசரி தரத்துடன் இருக்கிறது.
ரன்னிங் டைம் 2 மணி நேரம்...
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஒரு 'ராமநாராயணன்' பாணி கதையைத் தேர்ந்தெடுத்த விதம்.
நாய்களுக்கு குரலாக கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் போன்றோரை டப்பிங் பேச வைத்த ஐடியா ரசிக்க வைக்கிறது.
வில்லன்களை கொடூரமாக காட்டாமல், காமெடி கதாபாத்திரங்களாக கையாண்டது சிறப்பு.
லாஜிக் குறைகள் மற்றும் நெருடல்கள்:
நாய் ஒருவரின் காலில் சிறுநீர் கழிப்பதைக் காமெடியாக ஒருமுறை காட்டலாம்; ஆனால், அதையே மீண்டும் மீண்டும் காட்டுவது சலிப்பை தருகிறது.
நாய்க்குட்டி அடிக்கடி இடம் மாறுவதும், அது எப்போதும் பாதுகாப்பாக இருப்பதும் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது.
நாயகனைத்தேவை இல்லாமல் ஆக்சன் ஹீரோ மாதிரி பைட் எல்லாம் போட வைத்தது எதற்கு?
நாய்க்குட்டி யாரிடம் இருந்தாலும் அதிர்ஷ்டம் அவருக்கு அடிப்பது நம்பும்படி இல்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்.
ஃபைனல் கமெண்ட் - குழந்தைகள்,சிறுவர்கள் ரசிப்பார்கள்...செல்லப்பிராணிப்பிரியர்கள்,ப்ளூ கிராஸ் மெம்பர்கள் ரசிக்கலாம்...சராசரி சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு சாதாரண அனுபவமாகவே இருக்கும்.
ரேட்டிங்க் 2.5 /5