

1. மெர்சி (Mercy - 2026)
தளம்: அமேசான் பிரைம் (Amazon Prime)
வகை: சயின்ஸ் பிக்சன் த்ரில்லர் (அமெரிக்கத் திரைப்படம்)
நேரம்: 100 நிமிடங்கள் | சான்றிதழ்: 'U' (குடும்பத்துடன் பார்க்கலாம்)
திரையரங்கு வெளியீடு: 19/01/2026
கதைக்களம்: ஆர்ட்டிபிசியல் இண்ட்டெலிஜென்ஸ் கோலோச்சிய காலத்தில் ஏ ஐ ஜட்ஜ் குற்றவாளிக்கூண்டில் நிற்கும் நாயகனுக்கு 90 நிமிடங்கள் கால அவகாசம் தருகிறார்.அந்த நேரத்துக்குள் நாயகன் தான் நிரபராதி என தரவுகளுடன் நிரூபிக்க வேண்டும்.வித்தியாசமான திரைக்கதை இது. 60 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 53 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூலித்தது. ஆனாலும் இது ஒரு நல்ல படம். தமிழ் டப்பிஙகில் உண்டு. குடும்பத்துடன் பார்க்கலாம்.
2. 56 டேஸ் (56 Days - 2026)
தளம்: அமேசான் பிரைம் (18/02/2026 முதல்)
வகை: ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் (வெப் சீரிஸ்)
நேரம்: 8 எபிசோடுகள் (மொத்தம் சுமார் 400 நிமிடங்கள்) | சான்றிதழ்: 'A' (18+)
இது மொத்தம் 8 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும் 43 - 53 நிமிடஙகள் ரன்னிங டைம்.ஆக மொத்தம் 400 நிமிடஙகள். கிட்டத்தட்ட ஆறே முக்கால் மணி நேரம் ஆகும்.இது ஒரு ரொமாண்டிக் க்ரைம் திரில்லர்.
கதைக்களம்: நாயகனும் நாயகியும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சந்திக்கிறார்கள்,காதல் வயப்படுகிறார்கள்.ஆனால் அடையாளம் தெரியாத பிணம் ஒன்று கிடைக்கும்போது போலீஸ் இவர்கள் இருவரில் ஒருவர் தான் கொலையாளி என சந்தேகிக்கிறார்கள்.அந்த தீவிரமான விசாரணையை சுற்றியே கதை நகர்கிறது.இது ஏ படம்.
3. பிளேட் ஆஃப் ஃபியூரி (Blade of Fury)
தளம்: V R OTT (20/02/2026 முதல்)
வகை: ஆக்ஷன் (கத்திச்சண்டை)
நேரம்: 90 நிமிடங்கள் | சான்றிதழ்: 'U'
கதைக்களம்: பந்தயங்களுக்காகச் சண்டையிடும் ஒரு கத்திச்சண்டை வீரன், தன் இன மக்களுக்கு வரும் ஆபத்தைத் தன் உயிரைப் பணயம் வைத்துத் தடுப்பதே இப்படத்தின் கதை. இது 2024-ல் வெளியான படமாகும்.
4. லக்கி (Lucky - 2026)
தளம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) - 20/02/2026 முதல்
வகை: எமோஷனல் டிராமா
நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன், தம்பி ராமையா.
சான்றிதழ்: 'U'
கதைக்களம்: ஒரு சிறுமிக்கும், ஒரு குட்டி நாய்க்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பை மையமாகக் கொண்ட படம். தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி யில் ரிலீஸ் ஆகும் படம். இது யு படம்.
5. ஹாட் ஸ்பாட் - பாகம் 2 (Hot Spot 2)
தளம்: அமேசான் பிரைம் மற்றும் ஷார்ட் ஃபிளிக்ஸ் (Shortflix) - 20/02/2026 முதல்
வகை: அந்தாலஜி (Anthology)
நடிகர்கள்: பிரியா பவானி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார்.
சான்றிதழ்: 'UA'
கதைக்களம்: பிரியா பவானி சங்கர் ,எம் எஸ் பாஸ்கர் ,தம்பி ராமய்யா,அஸ்வின் குமார் நடிப்பில் 23/1/2026 ல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம். இப்போது 20/2/2026 முதல் ஓடிடி-யில் வருகிறது, ஒரு புதுமுக இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போன்ற அமைப்பில், மூன்று வெவ்வேறு சிறுகதைகளின் தொகுப்பாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
6. பவானே (PAVANE - 2026)
தளம்: நெட்ஃபிக்ஸ் (Netflix)
வகை: ரொமாண்டிக் மூவி
சான்றிதழ்: 'U'
கதைக்களம்: இது நேரடியாக நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆகும் ரொமாண்டிக் மூவி.அறிமுகம் இல்லாத, தனிமையில் இருக்கும் மூன்று பேர் நண்பர்களாகிறார்கள்.அவரவர் பணியில் இருக்கும் சிரமஙகளைப்பற்றிப்பகிர்ந்து கொள்கிறார்கள். இதற்குப்பின் இதில் இருவர் காதலிக்கிறார்கள், ஒரு சிக்கல் வருகிறது.அதை எப்படித் தீர்க்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.இது யு படம்.