மிரள வைத்த ஷைத்தான் படம்... இனி வீட்டிலேயே பார்க்கலாம்... எந்த ஓடிடி தளம் தெரியுமா?

Shaitaan Movie
Shaitaan Movie

திகில் காட்சிகள் நிறைந்த ஷைத்தான் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் தனக்கேற்ற கதாபாத்திரங்கள் வருவதில்லை என கூறிய ஜோதிகா, மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான 'காதல் தி கோர்' படம் பாராட்டுகளைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வந்தார். தற்போது பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவரது நடிப்பில் அடுத்ததாக ஷைத்தான் என்ற பாலிவுட் படம் வெளியாகி உள்ளது. இப்படத்தை சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஜய் தேவ்கன் தயாரிப்பில், விகாஸ் பால் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், பில்லி சூனியம் செய்யும் மந்திரவாதியாக மாதவன் மிரட்டியுள்ளார். அஜய் தேவ்கனும், ஜோதிகாவும் இரு குழந்தைகளுக்கு பெற்றோராக தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளனர். மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அஜய் தேவ்கன் - ஜோதிகா குடும்பத்தினர், கோடை விடுமுறையை கழிப்பதற்காக தங்களது பண்ணை வீட்டிற்கு வரும்போது, வழியில் மாதவனை சந்திக்கின்றனர்.

அஜய் தேவ்கனின் குடும்ப நண்பராகவும் மாதவன் மாறுகிறார். பின்னர், மாதவன் கொடுக்கும் லட்டை சாப்பிடும் அஜய் தேவ்கன் - ஜோதிகாவின் மகள் ஜான்வி பில்லி சூனியத்தின் பிடியில் சிக்குவதையும், அவர் மீட்கப்படுவதையும் கதைக்களமாக கொண்டு ஷைத்தான் படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ள நிலையில், தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
Shaitaan Movie

இந்த படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், ஏப்ரல் முதல் வாரத்திலேயே படத்தை வெளியிட திட்டமிட்டது. ஆனால், திரையரங்குகளில் வசூலை வாரியதால், ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வெளியாகியுள்ளது. 2 மணி நேரம் பெரும்பாலும் போரடிக்காமல் நகர்ந்து கொண்டேயிருக்கும் ‘சூப்பர் நேச்சூரல்’ படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கான தேர்வாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது இந்த படம்.

த்ரில்லர், ஹாரர் விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்ததாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com